ஷேல் எரிவாயுத் திட்ட வழக்கு.. தமிழக அரசு கருத்தை பதிவு செய்யாமல் இழுத்தடிப்பு.. வைகோ குற்றச்சாட்டு
ஷேல் எரிவாயுத் திட்டம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு முறையாக கருத்துக்களை பதிவு செய்யாமல் இழுத்தடிக்கிறது என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: காவிரி டெல்டா பகுதியை நாசமாக்க வந்திருக்கும் ஷேல் எரிவாயுத்திட்டம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள், கருத்துக்களை பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யாமல் உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்டா மாவட்டங்களில் ஆபத்தை உண்டு பண்ணும் ஷேல் கேஸ் எனும் பாறை படிம எரிவாயு குறித்த வழக்கு இன்று 2016 டிசம்பர் 20 தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக விவசாய சங்கத்தின் சார்பாக இந்த வழக்கில் தொடர்ந்து பங்கேற்று வருகிற வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தமிழ்நாட்டுக்கு குறிப்பாக சோழ மண்டலத்துக்கு இடிமேல் இடியாக ஆபத்துகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே உள்ளன.

அடிக்கு மேல் அடி
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் பேராபத்து, மத்திய அரசு கொண்டுவர முனைந்த மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் பேராபத்து, இன்றைய தமிழக அரசு மீத்தேனை விரட்டி அடித்த போதிலும், திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக இல்லை. மீத்தேனைவிட பேராபாயத்தை ஏற்படுத்தும் ஷேல் கேஸ் எனப்படும் பாறை படிம எரிவாயு திட்டத்தை மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தத் துடிக்கிறது.

தமிழகத்தை ஏமாற்றும் மத்திய அரசு
மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் ஷேல் கேஸ் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் உத்தேசம் இல்லை என்று தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு கூறினார். தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு நிகழ்ச்சியில் ஷேல் கேஸ் திட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என்று கூறிவிட்டு, அதே நாளில் இன்னொரு இடத்தில் ஷேல் கேஸ் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்றார்.

மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?
மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கொள்கை வழிகாட்டும் ஆணையில் ஷேல் கேஸ் திட்டம் தமிழ்நாட்டில், காவிரி படுகையில் குத்தாலம் பகுதியில் நிறைவேற்றப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை ரத்து செய்து, கொள்கை முடிவை மத்திய அரசு அறிவித்தால்தான் ஷேல் கேஸ் திட்டத்தை நாம் தடுக்க முடியும். கடந்த அமர்வில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த விவாதத்தை நான் முன்வைத்தபோது, நீதி அரசர் ஜோதிமணி அவர்கள் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கருத்தை பதிவு செய்யாத தமிழக அரசு
இன்று தீர்ப்பாயத்தில் மத்திய அரசு சார்பில், கருத்துச் சொன்ன வழக்கறிஞர் பொத்தாம் பொதுவாக ஷேல் கேஸ் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறினார். இதனை நாங்கள் ஏற்கவில்லை. அதைப் போலவே தீர்ப்பாயத்தின் கடந்த அமர்வில் தமிழ்நாடு அரசு ஷேல் எரிவாயு பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று நான் முன்வைத்த கருத்தை நீதியரசர் ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இருந்தபோதிலும் தமிழ்நாடு அரசு தன் கருத்தை தெரிவிக்கவில்லை.

வழக்கு ஒத்தி வைப்பு
எனவே இந்த வழக்கு விசாரணையை நீதியரசர் ஜோதிமணி, சுற்றுச் சூழல் நிபுணர் ராவ் அவர்கள் அமர்வு 2017 பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து அறிவித்தது. ஷேல் கேஸ் வழக்கில் மறுமலர்ச்சி திமுக விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன் தொடர்ந்த வழக்கில் நானும், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தொடர்ந்த வழக்கில் வழக்கறிஞர் சிவராஜசேகரன் அவர்களும் வழக்காடி வருகிறோம்."
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications