என்னது வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா? கலெக்டரிடம் புகார் கொடுத்த அர்ஜுன் சம்பத்
கோவை: வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாக பொய் தகவலை கூறி கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் மக்களிடம் மதமாற்றம் செய்து வருவதாக கூறி இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், கோவை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட கலெக்டரிடம் வைகோ மதம் மாறிய விவகாரம் தொடர்பாக ஒரு மனு அளித்தனர்.

இதுகுறித்து அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஜெபக்கூடம் நடத்தி வரும் கிறிஸ்தவ மத போதகர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும், அவரது குடும்பத்தினர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருவதாகவும் கூறி மத பிரசாரம் செய்து வருகிறார்.
வைகோ தினமும் பைபிள் படிக்க கற்று வருவதாகவும் அவர் பிரசாரம் செய்துள்ளார். ஆனால் இதனை வைகோ மறுத்துள்ளார். அப்படியானால், மத பிரசங்கி உண்மைக்கு மாறான தகவலை கூறுகிறாரா? இவ்வாறு கூறி அப்பகுதி மக்களை மதமாற்றம் செய்து வருகிறாரா?
எனவே மத பிரசங்கி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications