உளுந்தூர்பேட்டை அருகே வைகோ கார் மோதி விபத்து.. விவசாயி பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் விவசாயி சக்திவேல் என்பவர் உயிரிழந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சொந்தமான கார் ஒன்று உளுந்தூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது வண்டிப்பாளையம் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இதில் விவசாயி சக்திவேல் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வைகோவின் காரை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு தாமதமானதால் உயிருக்கு போராடிய விவசாயி சக்திவேல் உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விபத்து நிகழ்ந்தபோது வைகோ காரில் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications