தீயை நிறுத்துங்கள்... தீர்வு காணுங்கள்... ஸ்டெர்லைட் குறித்து வைரமுத்து
தீயை நிறுத்துங்கள், தீர்வு காணுங்கள் என்று ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டுக்கு வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதை வைரமுத்து கண்டித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களை தடுக்க நேற்று தடியடி நடத்தினர். அப்படியும் கட்டுக்கடங்காததால் போலீஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசினர்.

இதையடுத்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 12 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வைரமுத்து தனது டுவிட்டரில் கூறுகையில்
பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்
என்கிறது காவல்துறை.
அச்சப்பட வேண்டியது
அரசாங்கமல்லவோ?
தீயை நிறுத்துங்கள்;
தீர்வு காணுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்
— வைரமுத்து (@vairamuthu) May 22, 2018
என்கிறது காவல்துறை.
அச்சப்பட வேண்டியது
அரசாங்கமல்லவோ?
தீயை நிறுத்துங்கள்;
தீர்வு காணுங்கள்.#SterliteProtestMay22nd2018 #Sterlite


Click it and Unblock the Notifications
