பி.எஸ்.என்.எல் அலுவலகத்தினுள் புகுந்த காட்டு யானைகள்!
Subscribe to Oneindia Tamil
வால்பாறை: வால்பாறை அருகே அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் மைக்ரோ ஸ்டேஷனுக்குள் நள்ளிரவில் புகுந்த யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக்கல்லார், நல்லமுடி, வாகமலை, கவர்க்கல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் கவர்க்கல் எஸ்டேட் பகுதியிலுள்ள பி.எஸ்.என்.எல் மைக்ரோ ஸ்டேஷனுக்கு நள்ளிரவு நேரத்தில் ஐந்து யானைகள் கதவை உடைத்து உள்ளே புகுந்தன.
இரவு காவலர் குணசேகரன் பின் பக்கம் வழியாக சென்று அறையில் பதுங்கியபடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.வால்பாறை வனச்சரக அலுவலர் கிருஷ்ணசாமி, வனவர் முனியாண்டி ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.












Click it and Unblock the Notifications