ஜூலை 17ம் தேதி பாருங்க.. சுத்தமாக துடைத்தெடுக்கப் போகிறோம் தேமுதிகவை.. சந்திரகுமார் சவால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலை 17ம் தேதி மொத்த தேமுதிகவும் எங்களோடு வரப் போகிறது. திமுகவில் இணையப் போகிறது. காத்திருங்கள் என்று பீடிகை போடுகிறார் வி.சி.சந்திரகுமார்.

சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்கள் வரை விஜகாந்த்தின் நிழலாக வலம் வந்தவர் வி.சி.சந்திரகுமார். யார் போனாலும் இவர் போக மாட்டார் என்று இவரை விட விஜயகாந்த்துக்கு அதிக நம்பிக்கை இருந்தது. ஆனால் என்ன செய்வது போயே போய் விட்டார்.. கூடவே சிலரையும் சேர்த்துக் கொண்டு.

VC Chandrakumar says whole DMDK will come them on July 17

மக்கள் தேமுதிகவை ஆரம்பித்து திமுகவுடன் கூட்டணி வைத்து இவர்கள் 3 தொகுதிகளில் போட்டியிட்டனர். போட்டியிட்ட சந்திரகுமார், பார்த்திபன், சேகர் ஆகிய மூவருமே தோல்வியைச் சந்தித்ததனர். ஆனால் தற்போது இவர்கள் திமுகவில் இணைந்து விட்டனர்.

நீங்க மட்டும் வந்தா பத்தாது, மொத்த தேமுதிகவையும் தூக்கிக் கொண்டு வாருங்கள் என்று இவர்களிடம் திமுக கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது மாநில அளவிலான தேமுதிக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் புயல் போல போனிலும், நேரிலும் பேசி வருகிறார்களா்ம். மறுபக்கம் ஜூலை 17ம் தேதி சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள திமுகவில் இணையும் விழாவுக்கான ஏற்பாடுகளும் கடகடவென ஓடிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் சந்திரகுமார் கூறுகையில், ஜூலை 17ந் தேதி வரட்டும். ஒட்டுமொத்த தேமுதிகவும் எங்களுடன் வரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள். பெருவாரியான ஒன்றியச் செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் எங்களுடன் வரவுள்ளனர். தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் என்று சொல்கிறார் சந்திரகுமார்.

அவர் சொல்வதைப் பார்த்தால் விஜயகாந்த், பிரேமலதாவை, சுதீஷைத் தவிர அத்தனை பேருமே வந்து சேர்ந்து விடுவார்கள் போலிருக்கிறதே.. கப்பல் ரொம்பத்தான் பலவீனமாய்ருச்சோ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+