உள்ளாட்சி தேர்தல்.. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம்
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1999ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் நாடாளுமன்றம், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டுக்கு முன்னால் நடைப்பெற்ற தேர்தல்களில் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டு வந்தது.

2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட மோதிரம் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றது.
கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்று 25 இடங்களில் போட்டியிட்டது. குறிப்பாக, காட்டு மன்னார்கோவில் தொகுதியில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் அக்டோபர் 17, 19ஆம் நாட்களில் உள்ளாட்சித் தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மீண்டும் மோதிரம் சின்னத்தை ஒதுக்கும்படி கட்சியின் தலைவர் அளித்த மனுவின் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மோதிரம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
கடந்த 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பொதுச்சின்னத்தை பெறமுடியாத நிலையிலும் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றிப்பெற்றது.
ஆனால், இம்முறை 'மோதிரம்' என்னும் பொதுச்சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் உரிய முறையில் பயன்படுத்தி, பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டு மென்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் இடம்பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டணியின் சார்பாக போட்டியிடுகிற வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிப்பெறும் வகையில் களப்பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications