ஆன்ட்ராய்ட் புதிய அப்ளிகேஷன் கண்டுபிடித்த மாணவன் அர்ஜூனுக்கு கருணாநிதியின் பாராட்டு
சென்னை: சென்னை வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ். அர்ஜூனன் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து பாராட்டு பெற்றார்.
அர்ஜூனன் ஆன்ட்ராய்டில் ஐ சேப், ஸ்கூல் பஸ் லோகேட்டர் ஆகிய புதிய அப்ளிகேஷன்களை கண்டுபிடித்தமைக்காகப் பாராட்டினை தெரிவித்து பதக்கம் மற்றும் சான்றிதழை உலகப் புகழ் பெற்ற மாசசூய்ட்ஸ் பல்கலைக் கழகம் வழங்கியது.

இப்பல்கலைக் கழகம் பதக்கம் வழங்கியதைத் தொடர்ந்து, புதுடெல்லியில் நடைபெற்ற குழந்தைகள் தினத்தன்று மாணவன் எஸ்.அர்ஜூனனுக்கு "நேஷனல் சைல்ட் அவார் பார் எக்ஸப்ஷனல் அச்சீவ்மெண்ட் பார் கம்யூட்டர் டெக்னாலஜி " என்ற விருது மற்றும் சான்றிதழை மேதகு இந்திய குடியரசுத் தலைவர், இந்திய அரசின் சார்பில் வழங்கினார்.
இவ்விருதினைப் பெற்ற மாணவன் எஸ்.அர்ஜூனன் தனது கலைஞர் சமூக வலைதளத்தின் மூலம் மின்னஞ்சல் வழியாக கருணாநிதியின் வாழ்த்துகளைப் பெறக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கலைஞரை விருது பெற்ற மாணவன் அர்ஜூனன் இன்று நேரில் சந்தித்து, தனக்கு அப்பல்கலைக் கழகம் வழங்கிய பாராட்டுப் பத்திரத்தையும், இந்திய அரசு வழங்கிய பதக்கம் மற்றும் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்ச்சியின் போது அர்ஜூனின் பெற்றோர், சகோதரி, கருணாநிதியில் கலைஞர் சமூக வலைதள இயக்குநர்கள் என்.நவீன் மற்றும் எஸ்.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications