இலங்கை கடற்படை மீது "302" வழக்கு.. கைது செய்ய கோரி டிஜிபியிடம் வேல்முருகன் மனு
தமிழக மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை ராணுவத்தினர் மீது 302 வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வேல்முருகன் கோரியுள்ளார். இது தொடர்பான மனு ஒன்றை டிஜிபியிடம் நேரில் வழங்கினார் வேல்முருகன்
சென்னை: ராமேஸ்வர மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்ற புகார் மனு ஒன்றை டிஜிபியிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அளித்துள்ளார்.
இன்று காலை டிஜிபி அலுவலகம் சென்ற வேல்முருகன் புகார் மனுவி டிஜிபியிடம் ஒப்படைத்தார். காவல்துறை இயக்குனரிடம் வேல்முருகன் அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

06-03-2017 அன்று இரவு இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இப்படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினர் அனைவரது மீதும் தமிழக காவல் துறையின் மூலம் 302 கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், மேலும் இந்த படுகொலை சம்பவத்தின் போது அவர்கள் பயன்படுத்திய படகை பறிமுதல் செய்யவதற்கும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications