நீதானே.. நீதானே.. விஜய் பட ரிங்டோனைக் கேட்டு ஜெர்க் ஆன ரஜினிகாந்த்!
Recommended Video
சென்னை: தன்னை நோக்கி வீசப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு (ரொம்பக் கஷ்டமில்லாத கேள்விகள்தான்) யோசித்து யோசித்து ரஜினிகாந்த் பதிலளித்துக் கொண்டிருந்தபோது விஜய் பட பாடல் ரிங்டோனாக ஒலித்ததால் முகம் மாறிப் போனது ரஜினிக்கு.
போயஸ் கார்டன் வீட்டுக்கு வெளியே இன்று செய்தியாளர்களை ரஜினி சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ரஜினி தனது ஸ்டைலில் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

முன்பு அளித்த பேட்டிகளை விட இந்த முறை ஒவ்வொரு கேள்வியையும் நன்றாக உள் வாங்கி பதிலளித்தார் ரஜினிகாந்த். தூத்துக்குடி கலவரம் தொடர்பான கேள்விக்கு அவர் சிரித்தபடி, விளக்கம் கேட்டுள்ளது அவர்கள். அவர்களிடம் அதுதொடர்பாக விளக்கம் கொடுத்துக்கறேன் என்று செய்தியாளருக்கு பதிலளித்தார்.
இதேபோல ஒவ்வொரு கேள்விக்கும் அவர் பதிலளித்தார். வருமான வரித் துறையிடம் சமர்ப்பித்த கணக்கில் வட்டிக்கு பணம் கொடுத்தது தொடர்பான கேள்விக்கு மட்டும்தான் அவர் விரிவாக பதில் சொல்லவில்லை. மாறாக சுருக்கமா பதிலளித்து விட்டுக் கிளம்பிப் போனார்.
என்ஆர்சி குறித்த ஒரு நீளமான கேள்விக்கு ரஜினிகாந்த் யோசித்து யோசித்து பதிலளித்துக் கொண்டிருந்தார். அவர் பதிலளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு குறுக்கீடு ஏற்பட்டு ரஜினியை டென்ஷனாக்கியது. அதாவது ஒரு செய்தியாளருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அவர் போனை மியூட் செய்யாமல் வைத்திருந்ததால் ரிங்டோன் சத்தமாக ஒலித்தது. அது ரஜினிகாந்த்தை முகம் சுளிக்க வைத்தது.
அந்த ரிங் டோன் சத்தமாக ஒலித்ததால் அது ரஜினியை டிஸ்டர்ப் செய்து விட்டது. உடனே தனது பேச்சை நிறுத்திய ரஜினி காந்த் அப்படியே கன்னத்தில் கை வைத்தபடி அந்தப் பக்கம் பார்வையைத் திருப்பினார். ரஜினி திரும்பிப் பார்ப்பதை உணர்ந்த செய்தியாளர் போனை மியூட் செய்தார். ரிங்டோன் சத்தம் நின்றபிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய ரஜினி தனது பதிலைத் தொடர்ந்தார்.
அந்த செல்போன் ரிங்டோனில் ஒலித்த பாடலுக்குரிய இசை.. விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம் பெற்ற நீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம் என்ற பாடல்தான்... நல்ல பாட்டுதான்.. டைமிங் மிஸ் ஆகவே ரஜினியை டென்ஷனாக்கி விட்டது!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications