டெல்லி சட்டமன்ற தேர்தல்: நவ.25ல் தேதி விஜயகாந்த் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது பிரேமலதா வரும் 25ஆம் தேதி பிரசாரம் செய்கின்றனர்.

டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்க கூடிய தொகுதிகளில் போட்டியிட தே.மு.தி.க. முடிவு செய்தது. 11 தொகுதிகளுக்கு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முரசு சின்னத்தில் இவர்கள் போட்டியிடுகிறார்கள்.

Vijayakanth

இந்நிலையில், தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் டெல்லி செல்கிறார். 25ஆம் தேதி விஜயகாந்த்-பிரேமலதா இருவரும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.

மொத்தம் 70 தொகுதிகளை கொண்டுள்ள டெல்லியில் வரும் 4ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. முதல்வர் ஷீலா தீட்சித் களத்தில் நிற்கிறார்.

பா.ஜ.க. வேட்பாளர் விஜேந்திர குப்தா, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பா.ஜ.க. 66 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக ஹர்ஷவர்தன் களத்தில் உள்ளார். இவரை எதிர்த்து 12 பேர் போட்டியிடுகின்றனர். தேசியவாத காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+