Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குல தெய்வம் கோவிலில் மனைவியுடன் விஜயகாந்த் வழிபாடு... மாநாட்டு அழைப்பிதழை வைத்து கும்பிட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. குலதெய்வம் கோவிலுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும் விஜயகாந்த் செல்கிறார் என்றாலே அவர் முக்கிய முடிவுகளை எடுத்து விட்டார் என்று அர்த்தம் என்று தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இருமாதங்களே உள்ளன. ஆளும் அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற எதிர்கட்சிகள் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. எதிர்கட்சியான திமுக, புதிதாக கூட்டணி சேர்ந்துள்ள மக்கள் நலக்கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி என பலரும் தனித்தனியே அதிமுகவை தாக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக, அதிமுக தவிர அனைவரும் கூட்டணிக்கு வரலாம் என்கிறது பாமக. மக்கள் நலக்கூட்டணியோ, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக தவிர அனைவரும் கூட்டணிக்கு வரலாம் என்கிறது.

திமுக தலைவர் கருணாநிதியோ, கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது அனைவரும் வரலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் இணைந்துள்ளன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் அ.தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது. இதனால் சட்டசபையில் தே.மு.தி.க.வுக்கு அடுத்த இடத்தைத்தான் தி.மு.க.வால் பிடிக்க முடிந்தது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த தி.மு.க. தற்போது தனது மனதை மாற்றிக் கொண்டு காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது.

பலமுனைப் போட்டி

பலமுனைப் போட்டி

அ.தி.மு.க. ஒரு அணியாகவும், மக்கள் நலக் கூட்டணி இன்னொரு அணியாகவும், பாட்டாளி மக்கள் கட்சி மற்றொரு களம் காணும் நிலையில் பாஜகவும் தனிக் கூட்டணி அமைக்க ஆயத்தமாகிறது.

திமுக வியூகம்

திமுக வியூகம்

இது போன்ற ஒரு சூழ்நிலையில், காங்கிரசை மட்டும் கூட்டணியில் வைத்துக் கொண்டு வெற்றிக்கோட்டை எட்ட முடியாது என்கிற எண்ணமே தி.மு.க.வினர் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. எனவேதான் விஜயகாந்த்தை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று தி.மு.க. கணக்கு போட்டுள்ளது.

விஜயகாந்துக்கு அழைப்பு

விஜயகாந்துக்கு அழைப்பு

எனவேதான் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தி.மு.க.வும், காங்கிரசும் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தன. இதனை ஏற்றுக்கொண்டு தி.மு.க. அணியில் விஜயகாந்த் இணைந்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

பிரேமலதா செக்

பிரேமலதா செக்

மறுநாளே காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பற்றியும், சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளது பற்றியும் பேசினார்.

தேமுதிகவில் குழப்பம்

தேமுதிகவில் குழப்பம்

தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பிரேமலதாவின் இந்த கருத்தால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்த் உத்தரவு

விஜயகாந்த் உத்தரவு

இதனைத் தவிர்க்கவே தேர்தல் கூட்டணி பற்றி இனி யாரும் வாய் திறக்க வேண்டாம் என்று தே.மு.தி.க.வினருக்கு விஜயகாந்த் கட்டளை பிறப்பித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டணி தொடர்பாக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கும் இது போன்ற கருத்துக்கள் கூட்டணிக்கு குந்தகம் விளைவித்து விடக்கூடாது என்பதற்காகவே விஜயகாந்த் இது போன்ற ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவும் தூது

பாஜகவும் தூது

இதற்கிடையே பாஜக கூட்டணியில் விஜயகாந்த்தை மீண்டும் சேர்க்கவும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை வருகை தரும் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூட்டணி தொடர்பாக விஜயகாந்துடன் பேச்சு நடத்துவார் என்று கூறப்படுகிறது.

மக்கள் நலக் கூட்டணி

மக்கள் நலக் கூட்டணி

அதே வேளையில் ஊழலுக்கு எதிராக விஜயகாந்த் கருத்து தெரிவித்து வருவதால் வைகோ தலைமையிலான மக்கள்நலக் கூட்டணியில் அவரை சேர்ப்பதற்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு தலைவர்களான ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரும் தொடர்ந்து விஜயகாந்துடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

நிரூபித்த விஜயகாந்த்

நிரூபித்த விஜயகாந்த்

தேர்தல் நேரங்களில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் எப்போதுமே விஜயகாந்த் மிகவும் கவனமுடன் செயல்பட்டே வந்துள்ளார். 2006ம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அவர் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சி தே.மு.தி.க.தான் என்பதை நிரூபித்து காட்டினார்.

எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்து

எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்து

கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களை பெற்று போட்டியிடுவதற்கு இதுவே உதவிகரமாக இருந்தது. எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் விஜயகாந்த் பெற்றார்.

லோக்சபா தேர்தலில்

லோக்சபா தேர்தலில்

அதே நேரத்தில் கடந்த லோக்சபா தேர்தலின்போது வீசிய மோடி அலையை பயன்படுத்தி எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என கருதிய விஜயகாந்த் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் ஒரு இடத்தில் கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை.

தேமுதிகவினர் விருப்பம்

தேமுதிகவினர் விருப்பம்

அது போன்ற ஒரு நிலைமை வருகிற சட்டசபை தேர்தலிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் விஜயகாந்த் தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டுதான் தே.மு.தி.க.வினர் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப கூட்டணி வியூகத்தை அமைக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

மதுரை பயணம்

மதுரை பயணம்

காஞ்சிபுரம் மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது பற்றி அறிவிப்பார் என்று பிரேமலதா கூறியுள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் மதுரைக்கு அருகில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

குலதெய்வ தரிசனம்

குலதெய்வ தரிசனம்

சென்னையில் இருந்து மதுரை வந்த விஜயகாந்த் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவில் மலைக்கு பின்புறம் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

இன்று காலை மனைவியுடன் காரில் புறப்பட்ட விஜயகாந்த், திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வம் வீர சின்னம்மாள் கோவிலுக்கு சென்றார். அங்கு பயபக்தியுடன் அவர் சாமி தரிசனம் செய்தார்.

முக்கிய முடிவு

முக்கிய முடிவு

விஜயகாந்த் எந்த ஒரு முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பாகவும் குலதெய்வம் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருப்பதி ஆலயம் செல்வது வழக்கமாம். தற்போது குலதெய்வம் கோவிலில் தரிசனம் முடித்த அவர் மாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

யாருடன் கூட்டணி

யாருடன் கூட்டணி

தமிழக அரசியல் கட்சிகளில் தற்போது தேமுதிகவுக்குதான் ஏக கிராக்கி. பாஜக, திமுக, மக்கள் நலக்கூட்டணி என மூன்று தரப்புமே அக்கட்சியை தங்களுடன் கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்து வரும் நிலையில், தங்களது நிலை என்ன என்பதை விஜயகாந்த் வெளியிடாமல் கையை மூடியே வைத்துள்ளார். இதனால் அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தன.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

இந்நிலையில் தேமுதிகவை கூட்டணிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும்விதமாக, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஊழலில் ஊறிய கட்சிகள் என பிரேமலதா கடுமையாக சாடி இருப்பதன் மூலம், திமுக தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த் இடம்பெறப்போவதில்லை என்பது ஏறக்குறைய உறுதியாகவிட்டதாகவே தெரிகிறது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

எனவே மீதமுள்ள பாஜக அல்லது மக்கள் நலக்கூட்டணி உடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்க முடியும். இந்நிலையில் பா.ஜனதா உடன் கூட்டணி அமைக்கவே அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த சில தினங்களாக பாஜக தலைவர்கள், விஜயகாந்தை தொடர்ந்து சந்தித்துப்பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கடைசி வாய்ப்பாக மட்டுமே மக்கள் நலக்கூட்டனியை விஜயகாந்த் பயன்படுத்துவார் எனத்தெரிகிறது.

காஞ்சிபுரத்தில் கூட்டணி அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் கூட்டணி அறிவிப்பு

தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிக்கும் முன்பாக தனது குலதெய்வம் கோவிலுக்கும், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்வது வழக்கம். இன்னும் சில தினங்களில் காஞ்சிபுரம் மாநாட்டில் கூட்டணியை அறிவிக்க உள்ள நிலையில் இன்று குலதெய்வத்தை கும்பிட்டுள்ளார் விஜயகாந்த். யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பதை பொருத்து அரசியல் வானிலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்கின்றனர் தமிழக தேர்தலை களத்தை கூர்ந்து கவனிக்கும் அரசியல் நோக்கர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+