தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுகிறார் விஜயேந்திரர் - திருமாவளவன் ஆவேசம்
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்காமல் தமிழக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் புகார்
திருவள்ளூர்: தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை மன்னிப்பு கேட்காத விஜயேந்திரர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டிற்கு செல்லும் வழியில் திருத்தணி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், மீனவர்களுக்கு எதிராக கடல் எல்லை மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இலங்கை அரசுக்கு கண்டன் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விவகாரத்தில் இதுவரை விஜயேந்திரர் மன்னிப்பு கேட்காமல் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுவதாக திருமாவளவன் தெரிவித்தார். மேலும் அவர் மன்னிப்பு கேட்கும் வரை இந்த விவகாரத்தை தமிழ் அறிஞர்கள் விடமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
பின்னர் திருத்தணி தர்மராஜா கோயில் அருகில் உள்ள தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அழுத்தம் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications