For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''அம்மா.. அம்மா.. அம்மம்மா..மம்மா..''.. கோழி எப்படிக் கத்தும் என்று கேப்டன் கொடுத்த விளக்கம்!

|

சென்னை: இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பேச்சு, எங்கே, எப்போது இடம் பெற்றது என்று தெரியவில்லை. ஆனால் அவரது பேச்சு ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது.

அது ஒரு தேமுதிக கூட்டம். விஜயகாந்த் பேசுகிறார். கட்சியினரிடம் தமிழக அரசு வழங்கும் விலையில்லாத ஆடு, கோழி, மாடு வழங்கும் திட்டத்தைக் கிண்டலடித்துப் பேசுகிறார் விஜயகாந்த்.

அப்போது ஆடு, மாடு, கோழி எப்படிக் கத்தும் என்பது குறித்து தனது பாணியில் நக்கல் விட்டு ரவுசாகப் பேசியுள்ளார் விஜயகாந்த்.

ஆடு எப்படிக் கத்தும்?

ஆடு எப்படிக் கத்தும்?

முதலில் ஆடு எப்படிக் கத்தும் என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்கிறார். அவர்கள் மே என்று சொல்கிறார்கள். அதே போல விஜயகாந்த்தும் மே என்று கத்திக் காட்டுகிறார்.

சரி மாடு எப்படிக் கத்தும்?

சரி மாடு எப்படிக் கத்தும்?

அடுத்து மாடு எப்படிக் கத்தும் என்று கேட்கிறார். பிறகு அவரே மா என்று கத்திக் காட்டுகிறார். கூடவே அம்மான்னா மாடு கத்தும், மான்னுதானே கத்தும் என்றும் பன்ச் வைக்கிறார்.

கோழி எப்படிக் கத்தும்?

கோழி எப்படிக் கத்தும்?

இதுதான் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டிய சீன்... கோழி எப்படிக் கத்தும் என்று அடுத்துக் கேட்கிறார் கேப்டன். பின்னர் அவரே கொக் கொக் என்று கத்திக் காட்டுகிறார்.

அம்மா.. அம்மா.. அம்மம்மா.. அம்மம்மா...!

அம்மா.. அம்மா.. அம்மம்மா.. அம்மம்மா...!

கொக் கொக் என்று கத்திக் காட்டிய பின்னர், இப்படித்தான் கோழி கத்தும். ஒருவேளை, இவர்கள் கொடுக்கும் கோழியாக இருப்பதால் அம்மா.. அம்மா.. அம்மம்மா.. அம்மம்மா என்று சூப்பராக ஹம் செய்தபடி பேசி முடித்தாரே பார்க்க வேண்டும்.. கூட்டத்தில் செம அப்ளாஸ்.

அப்படியே அம்மன் கோவில் கிழக்காலே படத்து விஜயகாந்த்தைப் பார்த்தது போலவே இருக்கு! இப்ப இந்த வீடியோதான் பேஸ்புக்கில் படு சூடாக வலம் வரும் வீடியோவாகும்.

கோழி எப்படிக் கத்தும் என்று கேப்டன் கொடுத்த விளக்கம்

''அம்மா.. அம்மா.. அம்மம்மா..மம்மா..''.. கோழி எப்படிக் கத்தும் என்று கேப்டன் கொடுத்த விளக்கம்!

English summary
DMDK leader Vjayakanth mimicked like goat, cow in a party meeting. The video is on rounds in FB.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X