6 மணிக்குள்.. இல்லை இல்லை இன்றைக்குள்.. உளறி கொட்டிய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ வளர்மதி
ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்றைக்குள் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ வளர்மதி கூறியுள்ளார்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் வைக்கப்பட்டுள்ள அதிமுக பெண் எம்எல்ஏக்கள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது இன்றைக்குள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமியை அழைப்பார் என்று ஸ்ரீரங்கம் எம்எல்ஏ வளர்மதி நம்பிக்கை தெரிவித்தார்.
கூவத்தூரில் 9 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இதற்கிடை பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், பெண் எம்எல்ஏக்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ வளர்மதி ஆகியோர் பேசியதாவது:

சுதந்திரமாக...
கூவத்தூரில் அனைத்து மருத்துவ வசதி, உணவு வசதி செய்யப்பட்டுள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம். சுதந்திரமாக உள்ளோம். நேற்று எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்துள்ளோம்.
அழைப்பிற்காக...
எடப்பாடி பழனிச்சாமியுடன் 12 அமைச்சர்கள் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு நேற்று சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டுள்ளது. நேற்றே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எண்ணினோம். ஆனால் இன்னும் அழைக்கவில்லை. இன்றும் அழைப்பார் என்று காத்திருக்கிறோம்.
இன்றைக்குள்..
எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க இன்று மாலை 6 மணிக்குள் ஆளுநர் அழைக்க வேண்டும். இல்லை.. இல்லை.. இன்றைக்குள் அழைப்பார் என்று நினைக்கிறோம். அவர் ஒரு சிறந்த நாடாளுமன்றவாதி.
விசாரணை..
காவல்துறையினர் எங்களிடம் தனிதனியாக விசாரணை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்கு வாய்மொழியாகவும் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளோம்.
திவாகரன் புதியவரல்ல..
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சரோஜா, திவாகரன் புதிதாக கட்சிக்கு வந்தவரில்லை. ஜெயலலிதா இருந்த போதே கட்சிப் பொறுப்புக்களை வகித்தார். ராணுவக் கட்டுப்பாட்டுடன் எங்கள் கட்சி இயங்கி வருகிறது என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications