தண்ணீருக்காக தவியாய் தவிக்கும் மக்கள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
நெல்லை அருகே கிராம பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
நெல்லை: கடும் வறட்சி நிலவி வருவதால் நெல்லை கிராம பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
நெல்லை சுற்று வட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததால் ஆறு, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்கவில்லை.

ஆழ்துளை கிணறுகள் வறண்டு போனதாலும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள உக்கிரன்கோட்டை பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
2 குடிநீர் கிணறுகளும், 7 நீர்தேக்க தொட்டிகளும் உள்ளன. ஆனால் நீர் நிலைகள் வற்றியதால் இந்த தொட்டிகளில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் தண்ணீர் தேவைக்காக பொதுமக்கள் விவசாய கிணறுகளை தேடி சென்று வருகின்றனர்.
சில தனியார் வாகனங்கள் காட்டு பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து ரூ.100 வரை விற்பனை செய்கின்றன. குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் அதை கண்டுகொள்ளாமல் நிர்வாக அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 2 ஆண்டுகளாக இந்த பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள ஆறுகள், குளங்கள், கிணறுகளில் போதிய தண்ணீர் தற்போது இல்லை. விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உயிரை கையில் பிடித்து கொண்டு தண்ணீர் பிடித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications