தமிழ்நாட்டில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வரிகள்.. கணினிமயமான கிராம ஊராட்சிகள்.. இதோ அறிவிப்பு
சென்னை: கிராம ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் கட்டிட அனுமதி கட்டணம் போன்றவற்றை இனி நேரில் பணமாக செலுத்த முடியாதாம்.. இன்று முதல், ஆன்லைன் வாயிலாக வசூலிக்கும் நடைமுறை அமலாகி உள்ளது.. இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரகவளர்ச்சி ஆணையர் தாரேஸ் அகமது கடிதம் அனுப்பியுள்ளார்.. அந்த கடிதத்தில் உள்ளதாவது:

"தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கடந்த 2022-23-ம்ஆண்டுக்கான ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின்போது, ''ஊரகப் பகுதிகளில்மனைப்பிரிவுகள், கட்டிடம், தொழிற்சாலைகள் தொடங்கவும், தொழில் நடத்துவதற்கான அனுமதிகளும் ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும்.
கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும்கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும்'' என்று தெரிவித்தார். இந்த அறிவிப்புகளுக்கு இணங்க, கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் தங்கள் வரி மற்றும் வரியல்லா வருவாய் இனங்களை எளிதாக செலுத்த ஏதுவாக 'https://vptax.tnrd.tn.gov.in/' என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்: இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் இன்றுமுதல் (மே 22) நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனாளிகள் செலுத்த வேண்டிய வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இந்தஇணையதளத்தில் கிராம ஊராட்சிகளால் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 1.38 கோடி தரவுகள் உள்ளன.
இந்த இணையதளத்தில், கட்டணங்கள், வரிகளை இணையவழி கட்டணம், ரொக்க அட்டைகள், கடன் அட்டைகள், யுபிஐ கட்டணம், விற்பனை முனைய இயந்திரம்(பிஓஎஸ்) ஆகிய வழிகளில் செலுத்த முடியும். இதற்காக முதல்கட்டமாக 1000 பிஓஎஸ் இயந்திரங்கள் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஊராட்சிகள்: மனைப்பிரிவுகளுக்கு கிராம ஊராட்சியின் அங்கீகாரம் என்பது நகர ஊரமைப்பு இயக்ககம் அல்லது சிஎம்டிஏவால் வழங்கப்படும் தொழில் முன் அனுமதியை பொறுத்து வழங்கப்படும். கட்டிட அனுமதி என்பது குடியிருப்பாக இருந்தால் 10 ஆயிரம் சதுரடிக்கு மிகாமலும், 8 வீடுகளுக்குள்ளும், 12 மீட்டர் உயரத்துக்கு மிகாமலும், தரை மற்றும் 2 தளங்கள் வரையிலும் ஊராட்சிகள் அனுமதியளிக்கலாம்.

வணிக கட்டிடமாக இருந்தால் 2 ஆயிரம் சதுரடிக்கு உட்பட்டிருந்தால் அனுமதியளிக்கப்படும். அனைத்து கட்டிட அனுமதிகளுக்குமான அனுமதி விண்ணப்பங்களும் இன்று முதல் இணையதளம் வழியாகவே தரப்பட வேண்டும். இந்த விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகவே பரிசீலிக்கப்படும். கட்டணம் தொடர்பான கேட்புத் தொகை இணையதள வழியிலேயே அனுப்பப்படும்.
தொழிற்சாலை: கிராம ஊராட்சிகள் எந்த ஒரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது. இணையதளம் வழியாக ஆன்லைன் பிபிஏ தளத்தின் மூலம் மட்டுமே பெற வேண்டும். தொழிற்சாலைகளுக்கான கட்டிட அனுமதி மற்றும் உரிமம் ஆகியவையும் ஒற்றைசாளர முறையில் வழங்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையும் இன்று முதல் அமலாகிறது" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications