முதல்வரை மாற்றும் வரை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை.. தங்க தமிழ்ச்செல்வன் திட்டவட்டம்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றும் வரை ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டும் கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றும் வரை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சொகுசு விடுதியில் இருந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வெளியேறியதாக வெளியான தகவல் தவறானது என்றார்.

நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் 10 எம்எல்ஏக்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றதாகவும் அவர் கூறினார். மேலும் 25 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு எடப்பாடி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சபாநாயகர் நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில் எதற்காக தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் தினகரன் ஆதரவு எம்பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றும் வரை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வரை மாற்றும் கோரிக்கை ஏற்கப்பட்டால் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications