கூட்டணிக்கு நாங்கள் அவசரப்படவில்லை.. பொன். ராதாகிருஷ்ணன்

வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை என்ற பெயரில் தமிழக பாஜகவினர் பாதயாத்திரையை மேற்கொள்கிந்றனர். இந்தப் பாதயாத்திரை மதுரையில் தொடங்கியது.
மதுரை பாண்டி கோவிலிலிருந்து இந்த யாத்திரையை பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
நரேந்திர மோடியை மக்கள் தங்கள் பிரதமர் வேட்பாளராகவே நினைக்கின்றனர். தமிழக மக்கள் அவரை பிரதமராகவே ஏற்றுக்கொண்டுவிட்டனர். தமிழகத்தில் வரும் 22ம்தேதிவரை நடைபெறும் இந்த "வீடு தோறும் மோடி; உள்ளம் தோறும் தாமரை' என்ற பாதயாத்திரை பிரச்சாரம் நடைபெற உள்ளது.
இதில் 12,618 கிராம பஞ்சாயத்துக்களில், பா.ஜ.க வை சேர்ந்த தலைவர்கள், பாதயாத்திரையாக சென்று, வீடு வீடாக, மக்களை சந்திப்பர். பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பற்றியும், அவரது நிர்வாக திறன், நேர்மை, அவரது ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் அடைந்துள்ள வளர்ச்சி ஆகியவற்றை, கிராம மக்களுக்கு புரியும் விதத்தில் எளிமையாக விளக்க, முடிவு செய்துள்ளனர். இதனால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும்.
ஜாதி, மொழி, இனம், கடந்து மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். நாட்டு நலனையும் தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த புனித யாத்திரையின் போது மக்களிடம் தேசத்தின் தற்போதைய நிலை, ஏன் பாரதிய ஜனதாகட்சியையும் மோடியையும் ஆதரிக்க வேண்டும். என்பது போன்ற விஷயங்களை நேரடியாக சொல்வதோடு, மக்களின் தற்போதைய நிலை, அவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை நேருக்கு நேர் சந்தித்து அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
மோடி பிரதமராக தமிழத்தில் அனைத்துக்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். தற்போது தமிழத்தில் கூட்டணி நாடி பா.ஜ.கவுடன் பிற கட்சிகள் பேசி வருகின்றனர். நாங்கள் தற்போது கூட்டணிக்கு அவரப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அதன் பிறகு கூட்டணி பற்றி முடிவு செய்யப்படலாம் என்றார் அவர்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications