எனக்கு அழகிரியும், ஸ்டாலினும் ஒன்று தான்: வைகோ
மதுரை: திமுக பொதுச் செயலாளர் ஸ்டாலினும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியும் தனக்கு ஒன்று தான் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அவரது கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனக்கு சிறு வயதில் இருந்தே முத்துராமலிங்கத் தேவர் மீது ஈர்ப்பு உண்டு. அவர் மீது உள்ள மரியாதையால் நான் கடந்த 39 ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன் சென்று மரியாதை செலுத்தி வருகிறேன். நான் சிறையில் இருந்த ஆண்டுகளில் மட்டும் தான் பசும்பொன் செல்லவில்லை. தேர்தல் கூட்டணி பற்றி கருணாநிதி மிகவும் அன்பாக பேசியது மகிழ்ச்சியாக உள்ளது.

லோக்சபா தேர்தல் சமயத்தில் நான் மதுரையில் வைத்து அழகிரியை சந்தித்து பேசினேன். அப்போது ஏற்பட்ட அதே மகிழ்ச்சி தற்போது ஸ்டாலினை சந்தித்தபோதும் ஏற்பட்டது. எனக்கு அழகிரியும், ஸ்டாலினும் ஒன்று தான். கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் தான் பேச வேண்டும் என்றார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications