கள்ளக்குறிச்சியில் காரை கழுவிய போது.. கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு இளைஞர்களுக்கு.. ஷாக் சம்பவம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கரீம்ஷா தக்கா பகுதியை சேர்ந்த கலிபுல்லா என்பவர், தியாகதுருகம்-கலையநல்லூர் சாலையில் வாகனங்கள் சுத்தம் செய்யும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு அரவிந்த் என்பவர் மின்மோட்டாரை இயக்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து காரை கழுவிக்கொண்டிருந்தார். அப்போது தான் யாருமே எதிர்பார்க்காத அசம்பாவிதம் நடந்தது. அடுத்தடுத்து இரண்டு பேரை மின்சாரம் தாக்கி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கரீம்ஷா தக்கா பகுதியை சேர்ந்த கலிபுல்லாவுக்கு 66 வயது ஆகிறது. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம்-கலையநல்லூர் சாலையில் வாகனங்கள் சுத்தம் செய்யும் சர்வீஸ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம், தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் அரவிந்த் (26) என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வந்ததார். கலிபுல்லா நேற்று முன்தினம் இரவு காரை சுத்தம் செய்யுமாறு அரவிந்திடம் கூறியிருக்கிறார்.

இதையடுத்து கலிபுல்லாவின் சர்வீஸ் சென்டரில் இருந்த அரவிந்த், மின்மோட்டாரை இயக்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு காரை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வாட்டர் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்த கரிம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த 18 வயதாகும் ஷாகில் என்பவர், அரவிந்த்தை காப்பாற்ற முயற்சி செய்தார் அப்போது அவர், மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் மயங்கி விழுந்தனர்
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அரவிந்த் மற்றும் ஷாகில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் வாட்டர் சர்வீஸ் உரிமையாளரான கலிபுல்லா மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் காரை கழுவியபோது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக நம்முடைய உடல் மின்சாரத்தைக் கடத்தும் திறன் கொண்டது. ஏனெனில் மனித உடலில் சுமார் 70% நீர் மற்றும் தாது உப்புகள் இருக்கிறது. தண்ணீர் மற்றும் தாது உப்புகள் மின்சாரத்தைக் கடத்தும் திறன் உடையவை. எனவே, ஒருவர் உயர் மின்னழுத்தம் உள்ள கம்பியை தொடும் போது, மின்சாரம் உங்கள் உடல் வழியாகப் பாய்ந்து, குறைந்த மின்னழுத்தம்அல்லது பூமிக்கு செல்ல வழியைதேடும். அப்போது தான் ஆபத்து ஏற்படுகிறது.அதிலும் ஈர உடலுடன் மின்சாரத்தை தொடும் போது, உயிரையே எடுத்து விடுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications