ஃபர்ஸ்ட் அட்டம்ட்டிலேயே வச்சு செய்த திமுக மலையரசன்! அதிமுக சீனியரை பின்னுக்கு தள்ளிய புதியவர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் புதியவரான திமுக வேட்பாளர் மலையரசன் வெற்றி வாகை சூடி முதல்முறையாக டெல்லி நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் மலையரசன் (திமுக), ஆர்.குமரகுரு (அஇஅதிமுக), தேவதாஸ் உடையார் (பாமக), ஜெகதீச பாண்டியன் (நாம் தமிழர்) உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த தொகுதி திமுகவின் கோட்டை எனச் சொல்லப்படுகிறது. கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை திமுகவே ஆட்சி செய்திருந்தது. அது போல் 2008ல் தொகுதி பிரிக்கப்பட்ட பிறகு 2009ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் திமுக வேட்பாளரே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த காமராஜ் வென்றார். பிறகு 2019ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த பொன் கவுதமசிகாமணி வென்றார். 2009 ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டால் நடந்த மூன்று தேர்தல்களில் திமுகவே அதிகமாக வென்றுள்ளது.
இந்த தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் 5,61,589 வாக்குகளையும் அதிமுக வேட்பாளர் குமரகுரு 507805 வாக்குகளையும் பாமக வேட்பாளர் தேவதாஸ் ராமசாமி 73652 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதில் திமுக வேட்பாளர் மலையரசன் வெற்றியடைந்துள்ளார்.
இந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட மலையரசன் புதியவர். அதே நேரத்தில் உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியில் 3 முறை வென்ற அதிமுக மாவட்டச் செயலாளரான குமரகுரு முதல் முறையாக லோக்சபா தேர்தலுக்கு போட்டியிடுகிறார். எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவரான இவர், இந்த தொகுதியில் தேமுதிகவின் பலத்தோடு இறங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக காரணமே அதிமுக அரசுதான் என பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.
எனினும் அதிமுகவின் பிரச்சாரம் எடுபடவில்லை. இந்த நிலையில் முதல் முறையாக டெல்லி நாடாளுமன்றம் செல்லும் மலையரசன் யார் என்பதை பார்க்கலாம். 49 வயதாகும் மலையரசன் தியாகதுருகத்தில் வியாபாரியாக உள்ளார். முதுநிலை பட்டதாரியான இவர் இவர், தற்போது தியாகதுருகம் திமுக பேரூர் கழக செயலாளராக உள்ளார். 2006-ம் ஆண்டு கிளைக்கழக செயலாளராக கட்சிப் பணியைத் தொடங்கியவர். ஒன்றியத் துணைச் செயலாளராகவும், மாவட்ட பிரதிநிதி மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராகவும் கட்சிப் பணியாற்றிவுள்ளார்
உள்ளாட்சித் தேர்தலில் 2006 மற்றும் 2016-ல் சிறுநாகலூர் மற்றும் பொறையூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் மக்கள் பணியாற்றியவர், தியாக துருகம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கூட்டமைப்பின் தலைவராகவும் செயலாற்றியுள்ளார். முதன் முறையாக மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரது மனைவி பெயர் சாந்தி மலையரசன். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications