உங்க கிட்ட பான் கார்டு இருக்கா.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. அபராதத்தை தவிர்க்க இதை படிங்க!
சென்னை: இந்தியாவில் இரண்டு பான் கார்டு பயன்படுத்தினால் என்ன தண்டனை என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
பான் கார்டு அடையாள ஆவணமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிதி பரிவர்த்தனைக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட உள்ளது.
அதாவது தற்போது ஆதார் கார்டு போன்றவை எப்படி அடையாள அட்டையாக இருக்கிறதோ அது போல பண பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் ஆகிறது. இதன் மூலம் அதிக அளவிலான பண பரிவர்த்தனைகளை எளிதாக கண்காணிக்க முடியும்.
பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று அனைத்துடனும் இந்த எண் இணைக்கப்பட்டு இருக்கும்.

லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான்கார்டு அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது.
இரண்டு பான் கார்டு:இந்தியாவில் இரண்டு பான் கார்டு பயன்படுத்தினால் என்ன தண்டனை என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி , வருமான வரித்துறையின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளின்படி, தனிநபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தனிநபரும் அவர்களின் பெயரில் வழங்கப்பட்ட ஒரு பான் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும். இது அவர்களுக்கு என்று தனித்துவமானது மற்றும் வேறு யாருக்கும் மாற்ற முடியாது.

ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 272B இன் கீழ், தகவல் தொழில்நுட்பத் துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
இந்தப் பிரிவின்படி, அபராதம் ரூ. ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கும் தனிநபர் மீது 10,000 விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தனிநபர்கள் தங்களிடம் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கவனக்குறைவாகவோ அல்லது வேறுவிதமாகவோ தாங்கள் வாங்கிய கூடுதல் பான் கார்டுகளை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆதார் இணைப்பு:சமீபத்தில் கூட நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜூ ன் 30ம் தேதி வரை இதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும்.

அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.
மக்கள் பலரும் பான் கார்டை இணைக்காமல் இருந்த நிலையில் ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் கட்டணம் இன்றி பான் அட்டையை இணைக்க ஜூன் 30ம் தேதியுடன் நேரம் முடிந்துவிட்டது.
அதன்பின் வரும் ஜூன் 31ம் தேதி வரை கட்டணத்துடன் 1000 ரூபாய் செலுத்தி பான் அட்டையை இணைக்க முடியும். அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications