தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை... மக்கள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் சுற்றுவட்டார இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களிலும், அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

Wide rain in different parts of Tamil Nadu; Peoples are happy

அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டான் சுற்றுவட்டார இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. உளுந்தூர்பேட்டை, வண்டிப்பாளையம், குன்னத்தூர், மடப்பட்டு,அரசூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை சேப்பாக்கம், திருவில்லிக்கேணி, மெரினா, மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 9-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் பெய்யும் மழைக்காக காத்திருப்போம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+