பிரபாகரன் டார்ச்சர் தாங்க முடியலை.. பெண்களுடன் தொடர்பு.. சித்ரவதை செய்றாரு.. எஸ்ஐ மீது மனைவி புகார்
சப் இன்ஸ்பெக்டர் மீது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்
சென்னை: "என்னால பிரபாகரன் தரும் டார்ச்சர்களை தாங்க முடியவில்லை.. அவர் திருந்தவே இல்லை.. சித்ரவதை செய்கிறார்... அவருக்கு சில பெண்களுடன் பழக்கம் உள்ளது.. அதனால் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எஸ்ஐ மீது மனைவி புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் பானுரேகா.. இவர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் புகார் ஒன்றை தந்தார். அதில் தன் கணவன் மீது குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன் சுருக்கம் இதுதான்: "எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என் முன்னாள் கணவர் பிரபாகரன்.. காசிமேடு ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்... நான் பிஇ இன்ஜினீயரிங் படித்துள்ளேன்.. 1993-ம் ஆண்டு பிஇ படித்து முடித்தபோதுதான் பிரபாகரனுக்கு போலீசில் வேலை கிடைத்தது.

ஆறுதல்
அப்போதுதான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது.. 1994-ல் திருமணம் செய்துகொண்டோம். நன்றாக போய்க் கொண்டிருந்த எங்கள் வாழ்வில், பிரபாகரன் குடும்பத்தினரிடமிருந்து எனக்கும், என் குடும்பத்துக்கும் மிரட்டல்கள் வந்தன. ஆறுதலாக இருந்த பிரபாகரன், ஒரு கட்டத்தில், என் சம்பளத்தை கேட்க தொடங்கினார். நாளுக்கு நாள் அவரது தொல்லைகள் அதிகமாயின

பிரபாகரன்
அதனால் எனக்கு இன்னொரு கல்யாணம் செய்ய வீட்டில் முடிவு செய்தனர்.. அதன்படி 1995-ல் எனக்கு கல்யாணம் ஆனது.. ஒரு பெண் குழந்தை ஆனால், எனக்கும் பிரபாகரனுக்கும் நடந்த திருமண பதிவுச் சான்றிதழ்களை சீனிவாசனிடம் காட்டியதால், அவவர் என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். கைக்குழந்தையுடன் தவித்தேன்.

திருமண சான்றிதழ்
பிறகு முருகானந்தம் என்பவரை 1999-ல் கல்யாணம் செய்தேன்... எங்களுக்கு 2000-ல் ஆண் குழந்தை பிறந்தது. முருகானந்தத்திடமும் பிரபாகரன் திருமண சான்றிதழை காட்டினார்.. மிரட்டலும் விடுக்கவே முருகானந்தமும் பிரிந்து சென்றுவிட்டார்.. இப்போது 2 குழந்தைகளுக்காக உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 2017-ல் உறவினர் திருமணத்துக்காக சென்னைக்கு வந்தபோது, பிரபாகரனும் அங்கு வந்திருந்தார்.

திருந்தவில்லை
தன்னை மன்னித்துவிடும்படி என் காலில் விழுந்து கெஞ்சினார்... அவரின் நடிப்பைப் பார்த்து நானும் மனமிறங்கினேன்.. பெங்களூரிலிருந்து சென்னை வந்து அவருடன் குடும்பம் நடத்தினேன். ஆனால் அவர் திருந்தவே இல்லை.. வீட்டுக்கு மதுபோதையில்தான் வருவார். நகை, பணம் கேட்டு சித்ரவதை செய்வார். பிரபாகரனின் டார்ச்சர் தாங்க முடியாமல் புகார் தந்தேன்.. அவருக்கு சில பெண்களுடன் பழக்கம் இருப்பது தெரியவந்தது. அதனால் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

எதிர்பார்ப்பு
ஆனால், பானுரேகாவின் குற்றச்சாட்டை பிரபாகரன் மறுத்துள்ளதாக தெரிகிறது.. இதை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் கூறப்படுகிறது.. எனினும் இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் மாறி மாறி தெரிவிக்கப்பட்டு வருவதால், போலீசார்தான் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications