தவிக்க விட்டு எங்கே போனாய் என் கணவா.. கொட்டும் மழையில் மனைவி போராட்டம்!
Recommended Video

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு என்ற பகுதியில் தன்னை தவிக்க விட்டு போய் விட்ட கணவரை மீட்டுத் தரக் கோரி ஒரு பெண் கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இதுபோன்ற போராட்டங்கள் சர்வ சாதாரணம். ஆனால் இதுபோன்ற போராட்டங்கள் தொடர் கதையாகி வருவதுதான் வேதனையாக உள்ளது.
திருமணம் என்ற பந்தத்திற்கு என்னதான் அர்த்தம் என்ற கேள்வியும் எழுகிறது. பெரும்பாலும் இளம் மனைவிகளே இதுபோன்ற துயரங்களுக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பாதிக்கப்பட்ட பெண்தான் இந்த சகாய டென்சி.

நாகர்கோவில் பொண்ணு
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ரதீஷ். இவருக்கும் நாகர்கோவிலை சேர்ந்த சகாய டென்சி என்ற பெண்ணுக்கும் மிஸ்டு கால் மூலம் காதல் ஏற்பட்டது.

மிஸ்டு கால் மூலம் காதல்
தொடர்ந்து பேசிப் பேசி காதல் வளர்த்த இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக போனது வாழ்க்கை. மோகம் முப்பது ஆசை றுபது என்பது போல போகப் போக வாழ்க்கை கசந்தது. சண்டை ஏற்பட்டது. அடிக்கடி மோதல் ஏற்பட்டு 3 முறை காவல் நிலையம் வரை போய் சமாதானம் பேசி சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

கருத்து வேறுபாடு
கடைசியாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் வாடகை வீட்டில் குடியேறிய இத்தம்பதிக்கு இடையே மீண்டும் எழுந்த பிரச்னையால் கடந்த ஒரு மாதம் முன்பு மனைவியை தனியாக தவிக்க விட்டு ரதீஷ் வெளியூர் போய் விட்டார். நிராதரவாக விடப்பட்ட டென்சி, கையில் காசின்றி சாப்பிட உணவின்றி தவித்தார்.

கைவிட்டுச் சென்ற கணவர்
கணவனை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியாத நிலையில், இன்று கொட்டும் மழையில் மாமனார் - மாமியார் வசிக்கும் வீட்டு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் குதித்தார். எனது கணவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கவில்லை என்றால் எத்தனை நாட்கள் ஆனாலும் இங்கிருந்து நகரமாட்டேன் என கூறி மழையில் குடை பிடித்தபடி வீட்டு அமர்ந்துள்ளார். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications