கருணாநிதி உறுதியா இருப்பாரான்னு தெரியலையே!.. பொன். ராதாகிருஷ்ணனுக்கு சந்தேகம்

திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், அத்வானி இருந்தார், வாஜ்பாய் இருந்தார். அவர்கள் நல்ல தலைவர்கள், கண்ணியமானவர்கள். ஆனால் இப்போது பாஜக அப்படியா இருக்கிறது. நரேந்திர மோடி மோடி என்று பேசுகிறீர்கள். ஆனால் அதனால் நான் சற்றும் சலனப்படவில்லை. ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது அதன் தலைமை யார் என்பதையும் பார்க்க வேண்டும் என்று மோடியை தான் ஏற்கவில்லை என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருந்தார் கருணாநிதி.
இந்த நிலையில் கருணாநிதியைப் பார்த்து கேள்வி கேட்டுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன். இதுகுறித்து அவர் கூறுகையில், தேவை என்றால் கூட்டணி வைத்துக் கொள்வதும், வேண்டாம் என்றால் முறித்துக் கொள்வதும் திமுகவின் நடைமுறை. அதுபோல்தான் இப்போதும் திமுக முடிவு எடுத்துள்ளது.
கூட்டணியைப் பற்றி பாஜக கவலைப்படவில்லை. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி.
4 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. திமுக எடுத்த முடிவுக்கு காங்கிரஸின் அந்தத் தோல்விகூட காரணமாக இருக்கலாம். கருணாநிதி தற்போது எடுத்து உள்ள முடிவில் உறுதியாக இருப்பாரா என்பது சந்தேகம். யாருடன் பாஜக கூட்டணி அமைக்கிறது என்பதை கட்சியின் மேலிடமே அறிவிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications