ஆர்.கே.நகரில் முதல்வர், அமைச்சர்கள் தீவிர பிரசாரம்.. போட்டியில் முந்துகிறார் மதுசூதனன்?
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக வேட்பாளர் மதுசூதனன் முந்தி வருவதாக சொல்லப்படுகிறது. இப்போது போட்டி திமுக மற்றும் அதிமுக நடுவே என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆர்.கே நகர் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள், அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வர் என நாளுக்கு நாள் தலைவர்கள் தங்களைத் தேடி வருவதால் மக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தி.மு.க தரப்பில் செயல்தலைவர் ஸ்டாலினோ , ஆதரவு கூட்டணி கட்சித் தலைவர்களோ மக்களை இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்பதால் தற்போதைய சூழலில், தி.மு.க வின் பிரச்சார களம் சற்று தொய்வாகவே காணப்படுகிறது.

முதல்வர், துணை முதல்வர்
அதிமுகவில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீதி வீதியாக தினமும் 5 மணி நேர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். எம்எல்ஏக்களும் தீவிரமாக களமிறக்கப்பட்டுள்ளனர். ஆறுக்குட்டி எம்எல்ஏ ஆட்டம் ஆடி வாக்கு சேகரித்ததையும் பார்க்க முடிந்தது. இதனால் மதுசூதனன் தரப்பு உற்சாகமாக காணப்படுகிறது.

மானிய விலையில் ஸ்கூட்டர்
மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த "மானிய விலையில் ஸ்கூட்டர்" வழங்கும் திட்டம் ஆர்.கே நகரில் அவரின் பிறந்தநாளான வரும், பிப்ரவரி 24ம் தேதி அன்று தொடங்கப்படும் என்ற அறிவிப்பால் மதுசூதனனுக்கு பெண்கள் மத்தியிலும், கல்லூரி மாணவிகள் மத்தியிலும் திடீர் ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக vs அதிமுக
ஸ்டாலின் விரைவில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அப்போது திமுக தரப்பும் எழுச்சியடையும். எனவே போட்டி அதிமுக மற்றும் திமுக நடுவேயானதாகவே மாறும் என தெரிகிறது. மண்ணின் மகன் என்ற கோஷத்தோடு இரு தரப்பும் மோதும் நிலையில் தினகரன் சற்று அன்னியப்பட ஆரம்பித்துள்ளார்.

கிடுக்கிப்பிடி
பேராசிரியர் நாஜநாயகம் கருத்துக்கணிப்பில் தினகரனுக்கே வெற்றி என முடிவுகள் வெளிவந்தபோதிலும், அதை லயோலா கல்லூரி தங்களுடயை கருத்து கணிப்பு என சொல்லக்கூடாது. அதில் தங்களுக்கு தொடர்பு இல்லை என கூறியுள்ளது. எனவே கருத்து கணிப்புகள் சொல்வதை போல களம் இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும் தேர்தல் ஆணையம், மத்திய அரசின் அமைப்புகள் இணைந்து பணப்பட்டுவாடாவை தடுத்தால் அது தினகரன் தரப்புக்கு பின்னடைவாகவே செல்லும் வாய்ப்பு உள்ளது. புதிதாக திறக்கப்பட்ட ஒரு குக்கர் கடையை கூட வருமான வரித்துறையினர் சோதனையிட்டு நெருக்கடியை அதிகரித்திருந்தது நினைவிருக்கலாம்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications