விருத்தாசலத்தில் களமிறங்கும் சசிகலா? அப்போ ஆர்.கே. நகர் யாருக்கு?!
போயஸ்கார்டன் வீட்டில் உள்ள சசிகலா, விருதாச்சலத்தில் போட்டியிட்டு அரசியலில் அடியெடுத்து வைக்க முடிவு செய்துள்ளாராம்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்பாரா.. பதவியேற்ற பின்னர் அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் அவர் நிச்சயம் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட மாட்டார் என்ற பேச்சும் அடிபடுகிறது. மாறாக விஜயகாந்த் பாணியில் விருத்தாச்சலத்தில் அவர் போட்டியிடலாம் என்ற புதிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
விருத்தாச்சலத்திலிருந்து போட்டியிட சசிகலா முடிவு செய்திருக்கலாம் என்ற பேச்சு கிளம்பிட முக்கியக் காரணமே விஜயகாந்த் ராசிதான் என்றும் சொல்கிறார்கள். என்னதான் ஜெயலலிதாவுடன் 30 வருடமாக இருந்தேன் என்று சசிகலா கூறினாலும் கூட அது அவரது தோழியாக, சேவகியாக மட்டுமே இருந்துள்ளார் என்பதே உண்மை.
நேரடி அரசியலில் இதுவரை அவர் ஈடுபட்டதில்லை. அரசியல் பணிகள் எதிலும் அவர் நேரடியாக ஈடுபட்டதில்லை. ஒரு வார்டு கவுன்சிலராக கூட தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை.

அரசியலில் சசிகலா
சசிகலா அதிமுகவில் எந்தப் பதவியையும் வகித்ததில்லை. எனவே அவர் இப்போதுதான் முதல் முறையாக அரசியலுக்கு வரவுள்ளார். முதல் முறையாக அரசியலுக்கு வரும் சசிகலா, விஜயகாந்த் ராசியை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

விருதாசலத்தில் விஜயகாந்த்
விஜயகாந்த் அரசியலில் நுழைந்து முதல் முறையாக போட்டியிட்ட தொகுதி விருத்தாச்சலம். அடுத்த தேர்தலில் அவர் அரசியலில் மிகப் பெரிய ஏற்றத்தைப் பெற்றார். எதிர்க்கட்சித் தலைவரானார். அவரது கட்சி மிகப் பெரிய கட்சியாகவும் உருவெடுத்தது.

ராசியான தொகுதி
இதற்கெல்லாம் காரணம் இரட்டை இலையுடன் அவரசு முரசு கூட்டுச் சேர்ந்ததும், ஜெயலலிதா என்ற காந்தம் கூடவே இருந்தததும்தான் என்றாலும் கூட விருத்தாச்சலம் தொகுதிக்குப் பிறகுதான் அவர் ஏற்றம் பெற்றதாக சசிகலா கருதுகிறார். எனவேதான் முதல் தொகுதியாக அவர் விருத்தாச்சலத்தில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.

குறி வைக்கும் சகிகலா
விஜயகாந்த் கட்சி தற்போது வீணாகிப் போய் விட்டதையெலல்லாம் சசிகலா குரூப் கண்டு கொள்ளத் தயாராக இல்லை. விஜயகாந்த் முதலில் போட்டியிட்ட தொகுதியை ராசியாக அவர்கள் பார்க்கிறார்களாம். இதனால்தான் விருத்தாச்சலத்தை குறி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ரகசிய பேச்சு
இதை உறுதி செய்வது போல சமீபத்தில் போயஸ் கார்டன் இல்லத்திற்கு சமீபத்தில் விருத்தாச்சலம் வி.டி. கலைச்செல்வனை சசிகலா வரவழைத்து ரகசியமாகப் பேசியுள்ளாராம். கலைச்செல்வன் ஏன் வந்தார், என்ன பேசப்பட்டது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தான் போட்டியிடுவது தொடர்பாகவே சசிகலா அவரை வரவழைத்துப் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

வாக்கு வித்தியாசம்
2016 சட்டசபைத் தேர்தலில் விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட கலைச்செல்வன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி. கோபால்சாமியை சொற்ப வாக்குகளில்தான் தோற்கடித்தார். அதாவது 17,333 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சொற்ப வாக்குகளில்தான் இந்தத் தொகுதியில் அதிமுக வென்றிருந்தாலும் கூட விஜயகாந்த்துக்கு முதல் அறிமுகம் கொடுத்த தொகுதி, இதற்குப் பிறகுதான் அவர் அரசியலில் உச்சம் பெற்றார் என்ற ராசியைப் பார்த்து இங்கு போட்டியிடலாம் என்று சசிகலாவுக்கு யோசனை கூறப்பட்டுள்ளதாம்.

ஆர். கே. நகர் சென்டிமெண்ட்
ஆர்.கே.நகரில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குன்றினார். கடைசியில் வீடு திரும்பாமலேயே மரணமடைந்தார். இந்த சென்டிமெண்ட் காரணமாகவே அவர் ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலா ஆர்.கே. நகரில் போட்டியிட எதிர்ப்பும் எழுந்துள்ளது.
சசிகலா ஒரு வேளை விருத்தாச்சலசத்தில் போட்டியிடுவதாக இருந்தால் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications