டக்குன்னு டோனை மாற்றிய மாஃபா பாண்டியராஜன்.. ஜெ. ஆன்மா உசுப்பி விட்டுருச்சோ!

எனக்கு வாக்களித்தோரின் ஒட்டு மொத்த குரலுக்கும் முக்கியத்துவம் தருவேன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர்களின் எண்ணங்களை கேட்டு, அவர்களின் ஒட்டுமொத்த குரல்களுக்கு மதிப்பளித்து முடிவெடுப்பேன் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். ஜெயலலிதா அதிமுகவின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பேன் மாஃபா பாண்டியராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் சசிகலா பக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அம்மாவின் ஆன்மா எம்எல்ஏக்களின் மனச்சாட்சியை உசுப்பும் என்று கூறி நம்பிக்கையுடன் இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

Will surely listen to the collective voice of my voters - Minister Pandiarajan

இளைஞர்கள், அதிமுக தொண்டர்கள், மாணவர்கள் என பெரும்பாலோனோர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தற்போதய அரசியல் சூழ்நிலை பற்றி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இன்று தனது பதிவில் வாக்காளர்களின் ஒட்டு மொத்த குரலுக்கும் முக்கியத்துவம் தருவேன் என்றும் ஜெயலலிதா வலியுறுத்திய ஒற்றுமையை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பேன் என்று கூறியுள்ளார். மக்கள், தொண்டர்களின் கருத்துக்கு செவி சாய்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மாஃபா பாண்டியராஜனின் செல்போனுக்கு தினசரியும் ஆவடி தொகுதி வாக்காளர்கள் போன் செய்து ஓபிஎஸ்க்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறி வருகின்றனர்.

ஓபிஎஸ் சொன்னது போல மாஃபா பாண்டியராஜனின் மனசாட்சியை அம்மாவின் ஆன்மா உசுப்பியிருக்குமோ?

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் சசிகலா ஆதரவாக உள்ள மாஃபா பாண்டியராஜனின் டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+