காற்றின் வேகம் குறைவு - நெல்லை, தூத்துக்குடியில் காற்றாலை மின் உற்பத்தி கடும் சரிவு
நெல்லை, தூத்துக்குடியில் வீசும் காற்றின் வேகம் குறைந்து போனதால், காற்றாலை மின் உற்பத்தி கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
நெல்லை: காற்றின் வேகம் குறைந்து வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கடுமையாக சரிந்து விட்டது. இதனால் அதிகாரிகள் திகைப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் மின் தேவை ஒரு நாளைக்கு சராசரியாக 15 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது. இங்குள்ள அனல், புனல், காற்றாலை, அணு, சூரிய மின் நிலையங்கள் மூலம் சுமார் 18 ஆயிரம் மெகா வாட்டுக்கு மின் உற்பத்தி செய்ய முடியும்.

ஆனால் இந்த இலக்கை பல்வேறு தடைகளால் அடைய முடியவில்லை. தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலை மூலம் சுமார் 7 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி கிடைக்கும்.
ஜூன் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த காலத்தில் மின் தட்டுபாட்டை போக்க இது பெரிதும் கை கொடுக்கும். இருப்பினும் இதுவரை அதிகபட்சமாக 5 ஆயிரம் மெகா வாட் வரை மட்டுமே காற்றாலை மின்சாரம் கிடைத்து வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக தென்மேற்கு பருவ காற்று குறைந்து காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் காற்றாலை மின் உற்பத்தியும் பாதியாகச் சரிந்து விட்டது. தற்போது 1500 முதல் 3000 மெகா வாட் அளவிலேயே காற்றாலை மின் உற்பத்தி கிடைத்து வருகிறது.
இதை சமாளிக்க அரசு சார்பில் வெளியிடங்களில் இருந்து 2000 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்து தேவையை பூர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications