சேலத்தில் ரயில் தண்டவாளம் அருகே 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்த சக பயணி
சேலம்: கோவையில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 18 வயது பெண் சேலத்தில் ரயில் தண்டவாளம் அருகே சக பயணி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் கோவையில் இருக்கும் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அவர் கோவையில் இருந்து தனது சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை கிளம்பினார். ரயில் இரவு நேரத்தில் சேலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வழக்கமாக நிற்காத ஒரு இடத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
அப்போது அந்த பெண்ணின் கையில் இருந்த பர்ஸ் எதிர்பாராவிதமாக ரயிலுக்கு வெளியே விழுந்தது. உடனே அவர் அதை எடுப்பதற்காக கீழே இறங்கிச் சென்றார். அவர் ரயிலில் இருந்து இறங்குவதை பார்த்த சக பயணி ஒருவர் அவரை பின்தொடர்ந்தார்.
24 வயதாகும் அந்த வாலிபர் அப்பெண்ணை இழுத்துச் சென்று தண்டவாளம் அருகே உள்ள புதரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அப்பெண் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அந்த பெண் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications