தென்காசியில் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கிய கணவன் எஸ்கேப்.. மீட்க போராடிய மனைவி உயிருடன் இல்லை
தென்காசி: இன்றைய சூழலில் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. பலரும் சாத்தியமே இல்லாத அளவிற்கு கடன் வாங்கிவிடுகிறார்கள். சிறுக சிறுக வாங்கிய கடன் ஒரு கட்டத்தில் அசல் வட்டி சேர்ந்து பெரிய அளவில் வந்து நிற்கும்.. அப்படி வந்து நிற்கும் கடனை அடைக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். சில அவமானமாக நினைத்து தவறான முடிவெடுக்கிறார்கள். சுரண்டை அருகே கடன் பிரச்சனையால் வேதனை அடைந்த இளம்பெண் தனது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் வாழ்க்கையை முடித்துக்கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு கடன் வாங்கித்தான் பலர் தொழில் செய்கிறார்கள். சொந்த தொழில் செய்யும் பலர் வங்கியில் கடன் வாங்குகிறார்கள். எல்லாரும் தங்கத்தை வைத்து தான் கடன் பெறுவதாக நினைக்கிறார்கள்... ஆனால் அதுமட்டுமல்ல.. மகளிர் லோன் எடுக்கிறார்கள். வணிக லோன் எடுக்கிறார்கள், சிலர் வீட்டை அடமானம் வைத்து கடன் பெறுகிறார்கள், வாகனங்களை அடமானம் வைத்தும் கடன் பெறுகிறார்கள். சிலர் தனிநபர் கடனும் எடுக்கிறார்கள். எப்படி எடுத்த கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழலில் சிலர் முட்டாள்தனமான முடிவெடுக்கிறார்கள்.. அப்படித்தான் தென்காசியில் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவர், சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்த ராமலட்சுமி மகளான 31 வயதாகும் உமா என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தராஜ் சாம்பவர்வடகரையில் தனது மாமியார் ராமலட்சுமியின் பெயரில் உள்ள வீட்டை பாட்டாகுறிச்சியை சேர்ந்த மகேந்திரன் என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.5 லட்சம் கடன் வாங்கினாராம்.
அந்த பணத்துடன் வெளியூருக்கு சென்றுவிட்ட கோவிந்தராஜ் அதன்பிறகு தனது மனைவியுடனான தகவல் தொடர்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த உமா தனது தாயின் வீட்டுக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் ராமலட்சுமி குறிப்பிட்ட பணம் கொடுத்து தனது வீட்டை மீட்பது குறித்து மகேந்திரனிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் வீட்டை திருப்பித்தர மகேந்திரன் மறுத்துவிட்டாராம். இருதரப்பினரும் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. எனவே, நீதிமன்றம் மூலம் பிரச்சனைக்கு தீர்வுகாணுமாறு போலீசார் கூறினார்காளம். இதற்கிடையே, வீட்டை காலி செய்யுமாறு தன்னை சிலர் மிரட்டியதாக தனது தாயிடம் உமா கூறி அழுதுள்ளார்.
மேலும், மிகுந்த மன உளைச்சலுடன் இருந்து வந்த உமா நேற்று முன்தினம் மருந்தை தனது மகன் தர்ஷிக் முகுந்த்க்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக இறந்தார். தர்ஷிக் முகுந்த் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராமலட்சுமி சாம்பவர் வடகரை போலீசில் புகார் அளித்தனர். அதில்,"வீட்டை காலி செய்யுமாறு எனது மகளை மகேந்திரன் உள்பட சிலர் மிரட்டியதால் வாழ்க்கை முடித்துக் கொண்டார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications