சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்... அஞ்சறைப்பெட்டியில் மருந்திருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுர்வேதத்தில், நீரிழிவு மதுமேகம் என அறியப்படுகிறது. ஆயுர்வேத, நீரிழிவு நோய் ஒரு வளர்சிதை மாற்ற கபம் வகை சார்ந்த நோயாக கருதப்படுகிறது இதில் செரிமான குறைபாடு காரணமாக அஜீரன கோளாறுகளால் கணையத்தில் சர்க்கரை அதிகரித்து நோயை ஏற்படுத்துகிறது.

சர்க்கரை நோய் என்பது உண்மையில் ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. உடம்பிலிருந்து வரும் சர்க்கரையின் (Glucose) அளவைக் கட்டுப்படுத்த இயற்கையாக கணையம் (Pancreas) இன்சுலினை சுரக்கும்.

அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி அதற்கேற்ப உடல் உறவு, மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போது மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது என்று குறிப்பிடபட்டுள்ளது. மதுமேகாதி சூர்னம், வஸந்த குசுமாகர ரஸம், அஸ்வ கந்தா சூர்னம் (அமுக்கார சூர்னம்) போன்ற மருந்துகள் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது நோயை கட்டுக்குள் வைக்கும்.

சர்க்கரை நோயை குணப்படுத்த வீட்டு அஞ்சறைப் பெட்டியில் மருந்திருக்கிறது. உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமான இன்று சர்க்கரை நோய் அறிகுறிகள், பாதிப்புகள் வீட்டு மருத்துவத்தில் குணப்படுத்தும் மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசித்தல், தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, எப்போதும் களைப்பாக இருக்கும், ஆறாத புண், பிறப்புறுப்பில் இன்பெக்சன்,காரணமில்லாமல் எடை குறைதல், இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு, மிகக் கூடுதல் எடை, கால் மரத்துப் போய் உறுத்துதல், மங்கலான பார்வை ஆகிய அறிகுறிகள் காணப்பட்டால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

விளைவுகள்

விளைவுகள்

நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக, பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம்.சிறுநீரகங்கள் சேதமடையலாம்.இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்.காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.உடலுறவில் இயலாமை ஏற்படலாம். மூளைச்சேதமும்,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால்,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.

வெந்தையம்

வெந்தையம்

சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. தொடர்ந்து வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். அடுத்து பாகற்காய். பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்.

வாழைப்பூ

வாழைப்பூ

நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டார் என்றால் கண்டிப்பாக நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.

ஆவாரம்பூ

ஆவாரம்பூ

ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.இது மிக எளிமையான வழிமுறைஆகும். தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். நாம் உணவில் நிறைய பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு, பீர்க்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ், அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள்.

நாவல்பழம்

நாவல்பழம்

நீரிழிவுக்கு எதிரான ஒரு மிகவும் சக்திவாய்ந்த வீட்டுத் தீர்வு என அழைக்கப்படும், நாவல் பழம் நீரிழிவுக்கு மட்டும் பயனுள்ளதான பழமாக இல்லாமல், அதன் விதைகள் கூட இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவும். இந்தப் பழங்கள் ஜம்போலின் (jambolin) என்று அழைக்கப்படும் குளுக்கோசைடு கொண்டிருக்கின்றன.

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பாரம்பரியமாக நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இதில் உள்ள தாதுச் சத்துக்கள் உள்ளன.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை

சுண்டல் என அழைக்கப்படும், கொண்டைக் கடலை ஒரு நீரிழிவு நோயாளிக்கு குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. கொண்டடைக் கடலையை ஒரு இரவு நீரில் ஊற வைத்து மறுநாள் அந்த நீரை குடித்தால் அது நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் பயன்பாட்டை அதிகரிக்க உதவுகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. வீட்டு உணவுகளையும், அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களையும் மருந்தாக பயன்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+