ஏற்காடு இடைத் தேர்தல்- சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!
சேலம்: ஏற்காடு சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

வேட்பு மனுத் தாக்கல்
ஏற்காட்டில் டிசம்பர் 4-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது, இந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் நவம்பர் 9-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள், நவம்பர் 16-ந்தேதியாகும்.

வேட்பு மனு பரிசீலனை
நவம்பர் 18-ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் நவம்பர் 20-ந்தேதி.

வாக்குப் பதிவு
டிசம்பர் 4-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெறும். டிசம்பர் 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நடத்தை விதிகள் அமல்
இதையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் விதிமுறையின் படி உள்ளாட்சி அலுவலகங்களில் உள்ள முதல்வர் படம் அகற்றப்படுகிறது.

கட்டுப்பாடுகள்
சுவர் ஒட்டிகள், விளம்பர பேனர்கள் மற்றும் கட்டவுட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கார்களும் திரும்பப்பெறப்படுகின்றன. இதையடுத்து, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications