கோவை குற்றால அருவியில் குளிக்கும்போது இளைஞருக்கு திடீர் வலிப்பு.. பரிதாப பலி!!
அருவியில் குளிக்கும்போது வலிப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்தார்.
Recommended Video

கோவை : கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்தபோது இளைஞர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அருவியில் போதுமான மருத்துவ சிகிச்சை இல்லாததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கனமழை காரணமாக கோவையில் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆறு, குளம் என நீர்நிலைகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 9 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கோவை குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மழை அளவு குறைந்ததை அடுத்து, கடந்த 21ஆம் தேதி முதல் மீண்டும் கோவை குற்றாலத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே, அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தும் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உயிரிழந்தவரின் விபரம், அவருடன் வந்ததாக சொல்லப்படும் நபர், சிசிடிவி காட்சிகள், குற்றால அருவி நுழைவாயிலில் கட்டண பதிவு புத்தகம் ஆகியவற்றை கொண்டு காருண்யா நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அருவியில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியான இருந்ததால் வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், அருவியில் போதுமான மருத்துவ சிகிச்சை இல்லையென்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications