17 வயசு பையன்.. பொள்ளாச்சியையே நடுங்க வைத்த 19 வயது பெண்.. முதல்முறையாக போக்சோவில் கைதான கொடுமை
17 வயது சிறுவனை கடத்தி திருமணம் செய்த இளம்பெண் கைதானார்
பொள்ளாச்சி: 17 வயது சிறுவனுக்கு 19 வயது பெண் பாலியல் டார்ச்சர் தந்துவிட்டாராம்.. இதையடுத்து, இந்த இளம்பெண்ணை முதல்முறையாக போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் அந்த சிறுவன்.. 12-ம் வகுப்பு படிக்கிறார்.. இதே பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் யமுனா.. 19 வயதாகிறது..!
ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தவர் யமுனா.. அந்த பெட்ரோல் பங்குக்கு தன்னுடைய டூவீலருக்கு பெட்ரோல் போட செல்வாராம் அந்த சிறுவன்.. அப்போதுதான் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. 2 பேரும் செல்போன் நம்பரை வாங்கி வைத்து கொண்டு, அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

திருமணம்
இந்நிலையில் ஒருநாள் யமுனா, அந்த சிறுவனிடம் காதலிப்பதாக சொல்லி உள்ளார்.. மேலும் அந்த சிறுவனை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது... அப்படித்தான், கடந்த 26ம் தேதி யமுனா, சிறுவனை கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழனிக்கு அழைத்து போய்விட்டார்.. அங்கு அவரை கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைத்துள்ளார்.. அதற்கு பிறகு சிறுவனை, கோவை செம்மேடு பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.. அங்கிருந்த ஒரு கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்..

பலாத்காரம்
அப்போது, யமுனா, சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது... இதனிடையே சிறுவனின் பெற்றோர், மகனை காணாமல் எங்கெங்கோ தேடி உள்ளனர்.. இறுதியில் அந்த சிறுவனே வீடு வந்து சேர்ந்துள்ளான்.. நடந்ததை எல்லாம் பெற்றோரிடம் சொல்லவும், அதிர்ந்து போன பெற்றோர், பொள்ளாச்சி மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்திருக்கிறார்கள்.. பின்னர், யமுனாவிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்..

குடல் இறக்க நோய்
அப்போதுதான், சிறுவனை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. அதுமட்டுமல்ல, சிறுவனுக்கு குடல் இறக்க நோய் பாதிப்பு இருந்திருக்கிறது.. இதற்காக, சிறுவன் சிகிச்சையை எடுத்து வந்துள்ளான்.. அப்போதுதான் சிறுவனை மருத்துவமனையில் சந்தித்து, திருமண பேச்சை எடுத்துள்ளார் யமுனா.. சிறுவன் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.. ஆனால் யமுனாதான், சிறுவனை கட்டாயப்படுத்தி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

யமுனா
இப்போது யமுனா கைதாகி உள்ளார்.. முதல்முறையாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்... சிறுவன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்... பொள்ளாச்சி என்றாலே அந்த பிஞ்சுகளின் கதறல் இப்போது வரை நினைவுக்கு வரும் நிலையில், ஒரு இளம்பெண்ணே சிறுவனை கடத்தி சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications