பலாத்கார முயற்சியால் வேதனை.. பள்ளி மாணவி தற்கொலை... இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை!
நீலகிரி: நீலகிரியில் பள்ளி மாணவியிடம் எல்லை மீறி நடந்த வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த காரமடைகாரர் என்பவரது மகன் சரவணன். இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதியன்று தனது வீட்டருகே வசிக்கும் பள்ளி மாணவியை அழைத்துக்கொண்டு வந்து அவரிடம் எல்லை மீறி நடந்துகொண்டதுடன் பாலியல் பலாத்கார முயற்சியும் செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அம்மாணவி 17 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரது உறவினர்கள் முயற்சியால் மாணவி கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர், போலீசார் அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சோலுார் மட்டம் போலீசார் சரவணனை கைது செய்தனர். இந்த நிலையில் அந்த மாணவி மரணமடைந்தார்.
இது தொடர்பான வழக்கு ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, இதற்கான தீர்ப்பை நீதிபதி சர்வமங்களா வழங்கினார். அதில், குற்றவாளி சரவணனுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி அந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications