மனைவியை பிரசவத்துக்கு அனுப்பி விட்டு கொளுந்தியாளை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
நெல்லை: மனைவியை பிரசவத்துக்கு அனுப்பி வைத்து விட்டு அவரது தங்கையுடன் உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி அண்ணாநகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். கட்டிட தொழிலாளியான இவர் சேரன்மகாதேவியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார். தியாகராஜனின் காதல் மனைவியின் உறவினர் வீடு மேலப்பாளையம் நாகம்மாள் புரத்தில் உள்ளது. அவர்கள் கணவன்-மனைவி இருவரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து தங்க வைத்து சமரசம் பேசினர்.

அப்போது அந்த உறவினர் வீட்டில் தியாகராஜனின் மனைவிக்கு தங்கை உறவு முறையுள்ள செல்வி (வயது19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருந்தார். அவர் ஈரோட்டில் தனியார் பின்னலாடை கம்பெனியில் வேலை பார்த்து விடுமுறைக்கு வந்துள்ளார்.
அப்போது, தியாகராஜனின் மனைவி கர்ப்பிணியாக இருந்ததால், கொளுந்தியாள் உறவு முறையுள்ள ராணியிடம் அவர் சகஜமாக பழகினார். இதில் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து சில மாதங்களிலேயே தியாகராஜன், கொளுந்தியாள் ராணியிடமும் கள்ள உறவு கொள்ளத் தொடங்கினார். அதன்பின்னர் சில நாட்களில் தியாகராஜனின் வீட்டில் சமரசரம் ஏற்பட்டதால், தியாகராஜன் தனது காதல் மனைவியுடன் வெள்ளங்குழி சென்று விட்டார்.
சமீபத்தில் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ராணியின் உடலில் மாற்றம் தெரியவே அவரது வீட்டில் சந்தேகம் அடைந்து விசாரித்தனர். அப்போது ராணி 6 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. மேலும் அக்காள் கணவர் தியாகராஜனுடன் தொடர்பு வைத்தது குறித்தும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த ராணியும் அவரது பெற்றோரும் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி விசாரணை நடத்தி கட்டிட தொழிலாளி தியாகராஜன் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து தியாகராஜன் வெள்ளங்குழியில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications