குமரி அருகே நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்த வாலிபருக்கு வலை

Subscribe to Oneindia Tamil

குமரி: கன்னியாகுமரி அருகே ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை கட்டிப்பிடித்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளது மருதங்கோட்டை கிராமம். அப்பகுதியை சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். தினமும் அவர் ஊரில் இருந்து பேருந்தில் கடைக்கு வந்துவிட்டு செல்வது வழக்கம்.

அவர் வழக்கம் போல் இரவு பணி முடிந்து பேருந்து மூலம் மருதங்கோடு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மருதங்கோடு பகுதியை சேர்ந்த சுனில் என்ற வாலிபர் சாந்தியை பின் தொடர்ந்து சென்றார். ரோட்டில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அறிந்த அவர் சாந்தியை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை எதிர்பாராத சாந்தி பயந்து போய் கூச்சல் போட்டார். அவரது கூச்சல் சப்தத்தை கேட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்த சுனில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இது குறித்து சாந்தி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை தேடி வருகிறார்கள். சுனில் சமீபத்தில் தான் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+