பிரதமர் ஆபீசுக்கு சென்ற மெயில்! உடனே தமிழகம் வந்த சிபிஐ டீம்.. தஞ்சை இளைஞர் கைது! நடந்தது என்ன
தஞ்சை இளைஞர் பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறு கருத்துகளை அனுப்பியுள்ளார்.
தஞ்சை: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகளைப் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதற்காகத் தஞ்சை இளைஞரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குப் பொதுமக்கள் தங்கள் மனுக்களைக் கோரிக்கைகளை அனுப்பலாம். பிரதமர் அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அனுப்பலாம்.
அதேபோல பிரதமர் அலுவலகத்திற்கு என்றே தனியாக மின்னஞ்சல் முகவரியும் தரப்பட்டுள்ளது. அதன் மூலமும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை அனுப்ப முடியும்.

தஞ்சை இளைஞர்
இருப்பினும், சிலர் தேவையில்லாத தகவல்களைப் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்புகின்றனர். அதுபோல தான் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் அதிரடி காட்டியுள்ள சிபிஐ சம்மந்தப்பட்ட நபர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. தஞ்சை மாவட்டம் பூண்டியை சேர்ந்தவர் ஜானி விக்டர் ராஜா. இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் பி.ஹெச்.டி. படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி
இதற்கிடையே 35 வயதான இவர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பியுள்ளார். பிரதமர் குறித்த அவதூறு கருத்துகளை மெயில் வாயிலாக டெல்லியில் இருக்கும் பிரதமர் மோடி அலுவலகத்திற்கே ஜானி விக்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுப்பியதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த சிபிஐ சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சிபிஐ அதிகாரிகள்
எங்கே இருந்து இந்த மெயில்கள் வந்தது என்பது குறித்து சிபிஐ சிறப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சிபிஐ அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இந்த மெயில்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூண்டியில் இருந்து வந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து மெயில் அனுப்பியது யார் என்பதையும் கண்டறிந்த 9 பேர் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரிகள், உடனடியாக தஞ்சைக்கு விரைந்தனர்.

கைது
பூண்டியில் வசிக்கும் ஜானி விக்டர் ராஜாவை பிடித்த சிபிஐ சிறப்பு அதிகாரிகள் அவரை புதுக்கோட்டைச் சாலையில் உள்ள மத்திய அரசின் ஐஐசிபிடி அழைத்துச் சென்றனர். சிபிஐ அதிகாரிகளே நேரடியாக அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், உள்ளூர் போலீசாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே சில நாட்கள் விசாரணைக்கு பிறகு, இன்று சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பிரதமர் குறித்து அவதூறு பரப்பியதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications