Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சை ஷீலா.. வீடியோவில் தோன்றிய பட்டுக்கோட்டை நர்ஸ் ஷீலா.. தஞ்சாவூர் கலெக்டரிடம் அவார்டு வாங்கினாரே?

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: சிறந்த செவிலியருக்கான விருதினை பெற்ற பட்டுக்கோட்டை ஷீலாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது. இதுகுறித்த உண்மைத்தன்மை என்னவென்று தெரியவில்லை.. எனினும், விருது பெற்ற நர்ஸ் ஷீலாவின் விவகாரம் தற்போது பேசுபொருளாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் 2,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.. இந்த மருத்துவமனையில், 25 வருஷமாக நர்ஸாக வேலை பாரத்து வருகிறார் ஷீலா.. இவருக்கு 55 வயதாகிறது.. கடந்த மார்ச் மாதம்தான், செவிலியர் கண்காணிப்பாளராக புரமோஷன் பெற்றார் ஷீலா.

thanjavur Pattukkottai Nurse

சிறந்த நர்ஸ்: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடந்த நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஷீலாவுக்கு சிறந்த செவிலியருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழங்கியிருந்தார். நர்ஸுக்கு விருது கிடைத்த நிலையில், ஒட்டுமொத்த பட்டுக்கோட்டையும் மகிழ்ச்சியில் துள்ளியது.

ஆனால், கடந்த 2 நாட்களாகவே, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம், ஷீலா லஞ்சம் வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.

உள்நோயாளி:
விருது வாங்கிய தினமே, இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிவிட்டது.. அந்த வீடியோவில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளிடம் "கறாராக" பேசி லஞ்சம் வாங்குகிறார் ஷீலா.. பெண்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளின் உறவினர்களிடம், பணத்தை கறாராக கேட்டு வாங்கியதாக தெரிகிறது. இதனை சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர் ஒருவரே வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

thanjavur Pattukkottai Nurse

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? இதுநாள் வரை ஏன் இந்த வீடியோ வெளியிடப்படவில்லை? இந்த வீடியோவின் உண்மைத்தன்மை என்ன? அல்லது விருது பெற்ற காழ்ப்புணர்ச்சியால், யாராவது இப்படி செய்கிறார்களா? என்றெல்லாம் தெரியவில்லை. எனினும், ஷீலா லஞ்சம் வாங்குவது வீடியோவில் கிளியராக உள்ளது.

தலைமை மருத்துவர்: இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் பரபரப்பை தந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நர்ஸ் ஷீலாவிற்கு மெமோ கொடுத்துள்ளதாக பட்டுக்கோட்டை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மீனா கூறுகிறார்..

இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீனா சொல்லும்போது, வெளியாகியிருக்கும் வீடியோ தொடர்பாக நர்ஸ் ஷீலாவிடம் விசாரணை நடத்தி, மெமோ வழங்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக உயர் அதிகாரிக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றார். அவர் இப்போது விடுப்பில் சென்றுள்ளதால் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மெமோ தரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அரசு மருத்துவமனைகள்: தனியார் மருத்துவமனைக்கு போக முடியாத நிலைமை உள்ளதால், ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நாடி வருகிறார்கள். ஆனால், இங்கேயும் ஏழை மக்களிடம் லஞ்சம் வாங்குவது, தொடர்கதையாகி வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுகாதாரத்துறையும், பொது சுகாதாரத்துறையும் சிறப்பாக செயல்படுகிறது. அதி நவீன வசதிகள், திறமையான டாக்டர்கள், உயரிய சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் கிடைக்கிறது.. ஆனாலும்,

பரிசோதனைகள்: அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளை வீல் சேரில் உட்கார வைத்து கொண்டு செல்வதிலிருந்து ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து டெஸ்ட்களின்போதும், நோயாளிகளிடம் ஊழியர்கள் பணம் கேட்பதாக புகார்கள் பெருகி கொண்டே வருகின்றன.. அவ்வளவு ஏன் பிணவறைகளைகூட விடுவதில்லை.

சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் கேட்கும் ஊழியர்கள் குறித்து தெரிவிப்பதற்காக, புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.. ஆனால், அவைகளின் தற்போதைய நிலைமை என்னவென்று தெரியவில்லை.

ஏற்கனவே, பத்திரப்பதிவு, வருவாய்த்துறையில், லஞ்சம் வாங்கி, பெண் அதிகாரிகள் பொதுவெளியிலேயே அசிங்கப்பட்டு, வரிசையாக கைதாகி கொண்டிருக்கிறார்கள். இப்போது, சிறந்த செவிலியருக்கான விருதை கலெக்டரிடம் பெற்ற ஷீலாவும், லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவது மிகுந்த அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

நடவடிக்கைகள்: ஷீலா உண்மையிலேயே லஞ்சம் வாங்கினாரா? ஒருவேளை லஞ்சம் பெற்றது உண்மையானால், வெகுஜன மக்களிடம் பணத்தை கறக்கும், ஷீலா போன்ற மற்ற அரசு ஊழியர்களுக்கு வெறும் "மெமோ" மட்டுமே போதுமான நடவடிக்கையாக இருக்க முடியுமா????

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+