பொய் சொல்லும் தமிழக அரசு..விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளி! எடப்பாடி பழனிசாமி சுளீர்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் கனமழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா பருவ நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தினமும் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக செய்வதாக பொய்யான தகவலை தமிழக அரசு கூறுவதாகவும், விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் இருந்தது என அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் கனமழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா பருவ நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் கொட்டி வைத்து தொடர்ந்து காத்து கிடக்கின்றனர்.

லாரிகள் பிரச்சனை, கொள்முதல் பணி தாமதம் காரணமாக, தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெல் குவியல்கள் மனையில் நனைந்து வருகின்றன. இதனால், நெல்மணிகள் நனைந்து மீண்டும் முளைத்து வருவதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

https tamil oneindia com news chennai vijay-s-tvk-may-contest-alone-or-ally-with-aiadmk-intelligence-report-warns-dmk-of-election-impact-744641 html

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் இன்று தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வரும் நெல் குவியல்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்பதற்காக அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தஞ்சாவூருக்கு வந்தார். பின்னர் அவர் தஞ்சையில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சை அருகே உள்ள காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்தார்.

தஞ்சாவூர் மழை

அப்போது எடப்பாடி பழனிச்சாமி கூடியிருந்த ஏராளமான விவசாயிகளிடமும் கொள்முதல் தாமதம் காரணமாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வரும் நிலை குறித்தும், தொடர் மழையால் மூழ்கி பாதிப்படைந்த நெற்பயிர்கள் விவரங்கள் குறித்தும் கேட்டு அறிந்தார். இதற்கு விவசாயிகள், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொண்டு வந்தால் உடனுக்குடன் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துகின்றனர். இதனால் பல நாட்களாக கொள்முதல் நிலையங்களில் நெல்களை கொட்டி வைத்து காத்துள்ளோம், இதனால் நெல்கள் நனைந்து முளைத்து வருகிறது என கூறினர்.

நெல் கொள்முதல்

இதைகேட்டு எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளின் துயர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசுக்கு வலியுறுத்துவேன் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி," தஞ்சை காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தேன். விவசாயிகள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை கண்ணீருடன் தெரிவித்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் நேரடியாக விவசாயிகளிடம் கேட்டபோது வெறும் 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு

தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. தஞ்சை காட்டூர் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதலுக்காக விவசாயிகள் கொண்டுவந்து 15 நாட்களாக காத்துக் கிடக்கின்றனர். மேலும் கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய இடவசதி இல்லை. லாரிகள் பிரச்சனை, கொள்முதல் தாமதத்தால் நெல்கள் நனைந்து முளைத்து வீணாகி வருகிறது. எனவே விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+