தஞ்சையில் திமுக முன்னாள் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி நிலத்தை அபகரிக்க முயற்சி.. விவசாயி புகார்
தஞ்சை: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிராஜ். இவருக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தற்போது வீட்டுமனையாக மாற்ற இவர் முயற்சித்து வருகிறாராம். ஆனால் இந்த நிலம் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர் எனக் கூறிக் கொண்டு ஆறுமுகம் அசோக் என்பவர் சோலார் பேனல் அமைத்துள்ளாராம். இவர் தனது நிலத்தை அபகரிக்க முயல்வதாக விவசாயி ரவிராஜ் புகார் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ரவிராஜ் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் உள்ளதாம். இந்த நிலத்தை தற்போது வீட்டுமனையாக மாற்ற முயற்சித்து வருகிறாராம், இந்த நிலம் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜின் உறவினர் எனக் கூறிக் கொண்டு ஆறுமுகம் அசோக் என்பவர்,மின் உற்பத்தி செய்யக்கூடிய சோலார் பேனல் அமைத்துள்ளாராம்.

இதனிடையே தனக்கு சொந்தமான நிலத்திலும் எனது அனுமதியில்லாமல் மின்சார தூண்களை அமைத்து வருவதாகவும். சோலார் பேனல் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ரவிராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ரவிராஜ் கூறும் போது, நான் சோலார் பேனல் அமைப்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, ஆறுமுகம் அசோக் என்பவர் தான் இந்த பணியை மேற்கொள்கின்றனர் என்று கேட்டார்.. பின்னர் ஆறுமுகம் அசோக் என்பவர் என்னிடம் பேசி சென்னையில் உள்ள தனியார் விடுதிக்கு வரச்சொன்னார்.
அங்கு சென்றபோது, ஆறுமுகம் அசோக் என்பவர் எங்களது நிலத்தை அபகரிக்கும் தொனியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே, எனது நிலத்தில் அத்துமீறி மின் கம்பங்கள் அமைக்கும் பணியை தொடங்கிய ஆறுமுகம் அசோக் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது நிலத்தை காப்பாற்றி தர வேண்டும் என தஞ்சை வந்த முதல்வரிடம் மனு அளித்துள்ளேன்.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை இன்று மேற்கொண்டனர். ஆனால் எதிர்தரப்பினர் சம்பந்தப்பட்டவர் வராமல் வேறொருவர் ஆஜராகி பதில் அளித்தார். தொடர்ந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும் தன்னுடைய நிலத்தை காப்பாற்றி தர வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ரவிராஜ் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications