50 ஆண்டு கால கல்வி நிறுவனத்தை முடக்க முயற்சி? திமுக நிர்வாகியை கண்டித்து அதிரை ஜமாத் ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தை திமுக நகரச் செயலாளர் முடக்க முயற்சிப்பதாக கூறி அதிரை ஜமாத்தினர் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.
அதிராம்பட்டினம் திமுக நகரச் செயலாளராகவும், நகர துணைத் தலைவராகவும் இருப்பவர் ராம குணசேகரன். இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகாலமாக இயங்கி வரும் முஸ்லீம் பெண்களுக்கான கல்வி நிறுவனத்தை தன் சுய லாபத்திற்காக முடக்க முயற்சிப்பதாக திமுக நிர்வாகி மீது குற்றஞ்சாட்டும் அதிராம்பட்டினம் ஜமாத் அமைப்பினர், இந்த நில விவகாரத்தின் பின்னணி பற்றி விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

''1975 ஆம் ஆண்டிற்கு முன்பு அதிராம்பட்டினம் மக்தும் பள்ளி அருகில் உள்ள ரேடியோ பார்க் செயல்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது. எங்கள் ஊரில் வசித்து வருபவர்கள் ஒன்று சேர்ந்து 'அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏற்படுத்தி, அந்த அறக்கட்டளை மூலம் முஸ்லிம் பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காக 'இமாம் ஷாஃபி (ரஹ்) பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி' என்ற பள்ளியை நிறுவி, அந்தப் பள்ளி நடத்துவதற்காக மேலே கண்ட இடத்தை நீண்ட கால குத்தகைக்கு விடும்படி கேட்டதன் பேரில் 1975 ஆம் ஆண்டில் அந்த பள்ளிக்கு அடிநில குத்தகைக்கு விடப்பட்டது.''
''நிர்ணயிக்கப்பட்ட குத்தகையைச் செலுத்திக் கொண்டு, பள்ளிக்குத் தேவையான கட்டமைப்புகளை மிகுந்த பொருட்செலவில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடந்து வருகிறது. இதனை அங்கீகரிக்கும் விதமாக அப்போதைய அரசு 2009 ஆம் ஆண்டு அவ்விடத்தை நம் பள்ளிக்கு விற்க முடிவு செய்து பரிந்துரை ஒன்றை வெளியிட்டது. அதனை ஆட்சேபித்து ராம குணசேகரன் அளித்த மனுவினை உள்நோக்கம் கொண்டது என அப்போதைய மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ஐஏஎஸ் தள்ளுபடி செய்தார்.''
''பெண்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், எங்கள் பகுதியில் கல்வி பயின்று வரும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.''












Click it and Unblock the Notifications