விண்ணை முட்டிய தமிழ் மந்திரம்.. கோலாகலமாக நடந்த தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு.. மக்கள் பக்தி பரவசம்
தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தொடங்கி நடந்து வருகிறது.
Recommended Video
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு இன்று கோலாகலமாக நடந்தது. தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழியிலும் குடமுழுக்கு நடைமுறைகள் நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு பெரிய கோவில் எனப்படும் பெருவுடையார் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர்.
சோழ மன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது பெரியகோவில். 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட [பெரிய கோவில் ஆகும் இது. பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த கோவில் மராட்டிய மன்னர்களால் பிருகதீசுவரம் என்று அழைக்கப்பட்டது.
இந்த நிலையில் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதனால் பெரிய கோவில் எனப்படும் பெருவுடையார் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து வருகிறார்கள்.

விழா தொடக்கம்
8வது யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. அதன்பின் மகாபூர்ணஹதி பூஜை, ஹோமம் நடைபெற்றது. பல மாவட்டங்களில் இருந்து குடமுழுக்கு விழாவை காண மக்கள் வருகை புரிந்துள்ளனர் காலை 9.30 மணிக்கு விமானத்திற்கு குடமுழுக்கு நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு குடமுழுக்கு நடந்தது. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடந்தது.

என்ன சர்ச்சையை
பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் இரண்டு மொழியில் குடமுழுக்கு நடக்கிறது. தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள், மந்திரங்கள் ஓதப்பட்டது. கோபுரத்தில் தமிழ் மந்திரம் ஒலிக்க ஓம் நமச்சிவாய நாமம் விண்ணை முட்டியது. அதேபோல் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு, சம்ஸ்கிருத மந்திரங்களும் கூறப்பட்டது. இந்த தேவாரம், திருவாசகத்தை கேட்க நிறைய இடங்களில் சிறப்பு ஒலிப்பெருக்கி ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.

வேறு என்ன
அதன்பின் சரியாக 9:21 மணிக்கு ராஜ கோபுரத்தின் உச்சியில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் குடமுழுக்கு நடக்கிறது. இதனால் இந்த விழா அதிக முக்கியத்துவம் பெறுகிறது. காலை 10 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பெருவுடையார் விமானமான தஞ்சை பெரிய கோபுரத்திற்கும் பின்னர் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெறும்.

எத்தனை கோபுரம்
இதை பல லட்சம் மக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். இந்த விழாவில் இது மிகவும் முக்கியமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளது. இதில் ஒரு கோபுரம் ராஜ கோபுரம் ஆகும். மாலை 6 மணிக்கு பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நிறைவாக இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications