கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட.. 3 பேர்.. மயங்கி விழுந்ததால்.. தஞ்சையில் பரபரப்பு!
தஞ்சையில் 3 பேர் திடீர் மயக்கம் அடைந்துவிட்டனர்
தஞ்சை: தஞ்சையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்கள பணியாளர்கள் 3 பேர் திடீர் மயக்கமடைந்துள்ளனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று நம் நாட்டில் முழுவதுமாக குறையவில்லை.. மாறாக, தொற்று அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.. எனவே, கடந்த ஜனவரி 16-ம் தேதியில் இருந்து இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி ஆரம்பமானது.

இதற்காக முதல் கட்டமாக டாக்டர்கள், நர்ஸ்கள் சுகாதார பணியாளர்களுக்கு முறையான வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி போடப்பட்டது. இதற்கு பிறகு, 2-வது தவணையாக, அதாவது 28 நாட்களுக்கு பிறகு, மறுபடியும் 'டோஸ்' செலுத்த முடிவு செய்யப்பட்டது... அதன்படி, ஏற்கனவே தடுப்பூசி போட்டுகொண்ட சுகாதார பணியாளர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதில், மொத்தம் 3, 126 சுகாதார பணியாளர்களுக்கு இன்று 2வது 'டோஸ்' தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பமானது.. அதன்படி, 220 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது... தஞ்சை மெடிக்கல் காலேஜில் தடுப்பூசி போட்டு கொண்ட 3 பேருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.. இதனால், அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.. தீவிர சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மயக்கமடைந்த தகவல் பெரும் அதிர்ச்சியை தஞ்சையில் உண்டுபண்ணி வருகிறது.. இதனிடையே, சிகிச்சை பெற்று வரும் 3 பேரிடமும் மருத்துவ கல்லூரி முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
எதற்காக 3 பேர் மயங்கி விழுந்தனர் என்று தெரியவில்லை.. ஆனால், இன்னைக்கு 2வது டோஸ் போட்டு கொள்ள வேண்டாமென்று கேட்டு கொண்டனராம்.. அதையும் மீறி மருத்துவ கல்லூரி நிர்வாகம்தான் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஊசியை போட்டதாக பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications