போலீஸ் ஸ்டேசனில் பொறுக்கி தனம்! எட்டி உதைச்சு..லத்தியால் அடிச்சு! பட்டியலின இளைஞரை தாக்கிய காவலர்கள்
தேனி: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் பணிபுரிந்த அஜித் குமார் காவல்துறையினர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இதே நிலைதான் நீடிக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் கடந்த ஜனவரி மாதம் தேதி காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி இருக்கிறது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாத நிலையில் பட்டியலின இளைஞரை காவல்துறையினர் காலால் எட்டி உதைத்தும் லத்தியால் தாக்கிய அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமார் காவல் துறையினரால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம்.
மேலும் தோட்டத்தில் வைத்து அஜித்குமாரை போலீசார் தாக்கிய காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்திருக்கும் நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களின் மறுபக்கத்தை காட்டும் வகையில் மற்றொரு அதிர்ச்சி வீடியோ வெளியாகி இருக்கிறது. தேனியில் பட்டியலின இளைஞரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர் கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கடந்த 14-01-2025 அன்று காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் தனக்கு வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு விண்ணப்பித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 14.01.2025 அன்று தேவதானப்பட்டி காவல் நிலையத்திலிருந்து வழக்கறிஞர் பாண்டியராஜனுக்கு சிசிடிவி காட்சிகள் வழங்கப்பட்டது. இதில் தனது கட்சிக்காரருடன் தான் சென்று புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக அவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்.அ
அப்போது, இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து இழுத்து வந்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவல் நமக்கு கிடைத்த போது, இந்த வீடியோ விவகாரம் குறித்து விசாரித்ததில், சம்பந்தப்பட்ட இளைஞர் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சின்னச்சாமி என்பவது மகன் ரமேஷ் என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் கடந்த 14.01.2025 அன்று போலீசார் இவரை எதற்காக காவல் நிலையத்தில் வைத்து தாக்கினார்கள் என்ற தகவல் இதுவரை இல்லை.மேலும் இவர் மீது புகார் ஏதும் வரப்படாத நிலையில் இவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை,புகார் மற்றும் வழக்கு இல்லாத நிலையில் எதற்காக போலீசார் இவரை சரமாரியாக இழுத்து வந்து தாக்கினார்கள்,பின்னர் ஏன் விடுவித்தார்கள் என்பது தெரியவில்லை.
இந்த சிசிடிவி காட்சிகளில் ரமேஷ் ஒவ்வொரு காவல்துறை அதிகாரியின் காலில் விழுந்து தன்னை விட்டு விடும்படி கெஞ்சும் போதும்,காவல் ஆய்வாளர் அபுதல்கா உள்ளிட்ட அனைத்து காவல் துறையினரும் அவரை மாறி மாறி ஷூ ஆனால் மிதித்து தாக்கியதும்,மேலும் சரமாரியாக மாறி மாறி அவர் மீது தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது.
சில நாட்களுக்கு முன்பு மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில்,இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி அதன் சுவடுகள் இன்னும் ஓயாத நிலையில், தேனி மாவட்டத்தில் இதேபோல புகார் மற்றும் வழக்குப்பதிவு செய்யாமல் பட்டியலின இளைஞர் ஒருவரை காவல் துறையினர் காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் மீண்டும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications