தேனி மக்களை கதி கலங்க வைத்த “அரி கொம்பன்” யானை பிடிபட்டது.. எங்கே கொண்டு விடப்படுகிறது?
தேனி: தேனி மாவட்ட மக்களை கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்த அரிகொம்பன் என்ற காட்டு யானையை மயக்க ஊசிகள் செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு இந்த யானையை வனப்பகுதிக்குள் கொண்டு விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னைக்கானல் மற்றும் சாந்தம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் "அரி கொம்பன்" என்று அழைக்கப்படும் காட்டு யானை வலம் வந்தது. அரி கொம்பன் காட்டு யானை ஊருக்குள் புகுந்து அங்குள்ள கிராம மக்கள் 8 பேரை கொன்றது. விளை நிலங்களையும் சேதப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து கேரள வனத்துறையினர் அந்த காட்டு யானையை மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்து, தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதக்கானம் என்ற வனப்பகுதியில் விட்டனர். அந்த யானையின் நடமாட்டத்தை கண்டறிய கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி தொடர்ந்து கண்காணித்தனர்.

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது: அரிகொம்பன் யானை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மங்கல தேவி கண்ணகி கோவில் வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. அப்போது தேனி மாவட்டம் மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் யானை தஞ்சம் அடைந்தது. அங்கு அடிக்கடி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் 27-ந்தேதி 'அரி கொம்பன்' காட்டு யானை கம்பம் நகருக்குள் வந்தது. நகருக்குள் யானை வீதி, வீதியாக ஓடியது. திடீரென யானை ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். கம்பம் நகர மக்களை கதிகலங்க வைத்த இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இதற்கிடையே, ராயன்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகா நதி அணை பகுதியில் கடந்த சில தினங்களாக யானை முகாமிட்டு இருந்தது. அரிசி கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்ததில் , அரி கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்தனர்.
யானை எங்கு விடப்படுகிறது?: 2 மயக்க ஊசிகள் செலுத்தி அரிகொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்தனர். வனப்பகுதியில் இருந்து வந்து தனியார் ஒருவரின் தோட்டத்திற்குள் யானை நின்று கொண்டிருந்த போது வனத்துறையினர் யானையை பிடித்தனர். 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அவற்றை லாரி மூலம் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள வெள்ளி மலை என்ற இடத்தில் விடப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அங்கு விட்டால் தேனி மாவட்டத்திற்குள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. யானையை பயிற்சி முகாமில் விடக்கூடாது என்ற கேரள நீதிமன்ற உத்தரவு இருப்பதால் அதிலும் சிக்கல் உள்ளது. எனவே இந்த யானையை எங்கு விடுவது என்ற குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications