தேனியில் உள்ள காப்பகத்தில் என்ன நடந்தது.. குழந்தைள் குறித்து பரவும் வீடியோ குறித்து வெளியான விளக்கம்
தேனி: தேனியில் ஜெ.ஜெ.ப்ரோடிஜீஸ் என்ற பெயரில் குழந்தைகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை ஜெனிபர் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு தேனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை விட்டு செல்வார்கள். இந்நிலையில் காப்பக பெண் ஊழியர்கள் குழந்தைகளுடன் விளையாடிய வீடியோ குறித்து தவறான தகவல்கள் பரவிய நிலையில், அந்த காப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
தேனி நகராட்சிக்கு உட்பட்ட சிதம்பரனார் தெருவில் ஜெ.ஜெ.ப்ரோடிஜீஸ் என்ற பெயரில் குழந்தைகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை ஜெனிபர் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

தேனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை இங்கு வந்து விட்டுவிட்டு, மாலை நேரத்தில் வேலை முடிந்து திரும்பும்போது தங்கள் குழந்தைகளை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். இங்குள்ள நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் குழந்தைகளை பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுமார் 1.5 வயது உள்ள குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு காப்பகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அந்தக் குழந்தையை குப்பைத்தொட்டியில் விளையாடுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தையை துன்புறுத்துவது போன்ற காட்சிகள் வெளியாகியதால், இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது குறித்து குழந்தைகள் காப்பகத்திற்கு சென்ற குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அங்கிருந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே வீடியோவானது கடந்த நான்கு மாதங்கள் முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை சிலர் வேண்டுமென்னே தவறான நோக்கத்துடன் எடிட் செய்து பரப்புவதாகவும், குழந்தைகைக்கு எந்த ஒரு துன்புறுத்தலும் நடக்கவில்லை என்றும் அந்த குழந்தை நன்றாகவே இருப்பதாகவும் காப்பக ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications